ADDED : ஜூலை 28, 2011 01:24 AM
கயத்தாறு : கயத்தாறு அருகே வீட்டில் பீரோவை உடைத்து 13 பவுன் நகைகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.,கயத்தாறு அருகே காப்புலிங்கம்பட்டி மேலத்தெருவைச் சேர்ந்தவர் செல்லத்துரை மனைவி முத்துலட்சுமி(25). இவர் காலையில் தோட்டத்து வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது பீரோவில் இருந்த 5 பவுன் டாலர் செயின், 5 பவுன் தாலிச்செயின் மற்றும் 3 பவுன் நெக்லஸ் உட்பட மொத்தம் 13 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து கயத்தாறு போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். கயத்தாறு இன்ஸ்பெக்டர் சங்கர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த மாடசாமி மகன் செல்வம்(25) என்பவர் நகைகளை கொள்ளைடியத்திருப்பது தெரியவந்தது. உடனடியாக செல்வத்தை கைது செய்து கோவில்பட்டி கோர்ட்டில் ஒப்படைத்தனர்.


