/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/அதிகாரிகளை தடுத்தால் கடைக்கு சீல்:கலெக்டர் பாலாஜி எச்சரிக்கைஅதிகாரிகளை தடுத்தால் கடைக்கு சீல்:கலெக்டர் பாலாஜி எச்சரிக்கை
அதிகாரிகளை தடுத்தால் கடைக்கு சீல்:கலெக்டர் பாலாஜி எச்சரிக்கை
அதிகாரிகளை தடுத்தால் கடைக்கு சீல்:கலெக்டர் பாலாஜி எச்சரிக்கை
அதிகாரிகளை தடுத்தால் கடைக்கு சீல்:கலெக்டர் பாலாஜி எச்சரிக்கை
ADDED : ஜூலை 26, 2011 09:36 PM
விருதுநகர்:கடைகளில் தரப்பரிசோதனைக்குவரும் அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தால் கடைக்கு சீல் வைக்கப்படும் என கலெக்டர் பாலாஜி எச்சரித்துள்ளார்.
விருதுநகரில் தனியாருக்கு சொந்தமான கடையில் உணவு பொருள் மாதிரி சேகரிக்க சென்ற சுகாதாரத்துறை ஆய்வாளர், உணவு ஆய்வாளர் ஆகியோரை பணி செய்யவிடாமல் தடுத்த கடை உரிமையாளர் செயல் கண்டிக்க தக்கது. சுகாதார அதிகாரிகள் உணவுப் பொருள்களை தரப்பரிசோதனைக்கு எடுக்க கடை உரிமையாளர்கள் அனுமதிக்க வேண்டும். மறுக்கும் பட்சத்தில் கலப்பட பொருள் என தீர்மானித்து கடையை சீல் வைத்து தனி நபருக்கான கடை உரிமத்தை ரத்து செய்யவோ, முடக்கம் செய்யவோ, மூடி முத்திரை யிடவோ மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரம் உள்ளது. வர்த்தகர்கள் இது போன்ற செயலில் ஈடுபட்டால், அரசு பணியாளர்களை செயல்பட விடாமல் தடைசெய்தால் உணவு கலப்பட தடைச்சட்டம், தரக்குறைவான பொருள்களை விற்பனை செய்தல் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும், என, கலெக்டர் பாலாஜி எச்சரித்து உள்ளார்.