ADDED : ஜூலை 25, 2011 10:27 PM
தேனி : தேனி பைபாஸ் ரோட்டில் வேகமாக வரும் வாகனங்களால் விபத்து அபாயம் உள்ளது.
பைபாஸ் ரோட்டில் தினமும் காலை, மாலை நேரங்களில் நூற்றுக்கணக்கானோர் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். ரோட்டை ஒட்டிய பகுதியில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுகின்றனர். இந்த ரோட்டில் வாகனங்கள், 100 கி.மீ., வேகத்திற்கும் மேல் செல்கின்றன. இதனால் ரோட்டோரங்களில் நடை பயிற்சி மேற்கொள்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. வாகன போக்குவரத்தை தேனி நகர் வழியாக திருப்பி விடலாம். காலை 5 மணி முதல் 8 மணி வரை இது போல் திருப்பி விடலாம். அந்நேரங்களில் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் இருக்காது என்பதால், வாகன ஓட்டிகளும் எளிதில் செல்லலாம்.