Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/அவமதிப்பு வழக்கு: ஆர்.டி.ஒ., ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

அவமதிப்பு வழக்கு: ஆர்.டி.ஒ., ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

அவமதிப்பு வழக்கு: ஆர்.டி.ஒ., ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

அவமதிப்பு வழக்கு: ஆர்.டி.ஒ., ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

ADDED : செப் 27, 2011 11:27 PM


Google News
மதுரை: அவமதிப்பு வழக்கில் ஆஜராகி, விளக்கமளிக்க சிவகங்கை ஆர்.டி.ஒ., துர்க்காமூர்த்திக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரை ஐகோர்ட் கிளையில் சில நாட்களுக்கு முன், மணல் திருட்டு குறித்து பறிமுதல் செய்த வாகனங்களை விடுவிக்க கோரிய வழக்கு விசாரணைக்கு வந்தது. இதற்காக, ஐகோர்ட் கிளைக்கு வந்த ஆர்.டி.ஒ., துர்க்காமூர்த்தி, கோர்ட் ஹாலுக்குள் மொபைல் போனில் பேசினார். இதை வக்கீல் கே.நீலமேகம் படமெடுத்தார்.

இதுகுறித்து துர்க்காமூர்த்தி மீது வழக்கு பதிய, ஒத்தக்கடை போலீசாருக்கு உத்தரவிட கோரி, ஐகோர்ட் கிளையில் நீலமேகம் மனு செய்தார். இம்மனு நேற்று நீதிபதி சுந்தரேஷ் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையை அக்., 12க்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

துர்க்காமூர்த்தி மீது கோர்ட் அவமதிப்பு செய்ததாகவும், நீலமேகம் தனியாக தாக்கல் செய்த மனுவும் நேற்று நீதிபதி பி.ஜோதிமணி முன் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, துர்க்காமூர்த்திக்கு நீதிபதி உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us