Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவையை மகிழ்விக்கும் பிரமாண்ட கண்காட்சி

கோவையை மகிழ்விக்கும் பிரமாண்ட கண்காட்சி

கோவையை மகிழ்விக்கும் பிரமாண்ட கண்காட்சி

கோவையை மகிழ்விக்கும் பிரமாண்ட கண்காட்சி

ADDED : செப் 25, 2011 01:18 AM


Google News

கோவை :கோவை மக்களை மகிழ்விக்கும் கட்டுமானம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் தொடர்பான மாபெரும் கண்காட், கொடிசியாவில் வரும் 30 முதல் அக்.,3 வரை நடக்கிறது.மக்களின் தேவை அறிந்து சேவை அளிப்பதில் 'தினமலர்' நாளிதழுக்கு இணை இல்லை.

அது தரமான செய்திகள் ஆகட்டும்... மாணவர்களின் கல்விக்கு உதவும் நிகழ்ச்சிகள் ஆகட்டும்... உலக தரத்தினால் ஆன பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குவதில் ஆகட்டும். ஒவ்வொரு ஆண்டும் பெருகி வரும் மக்களின் ஆதரவில் இருந்து இந்நிகழ்ச்சிகளின் தரம் நிரூபிக்கப்பட்டு வருகிறது.ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ' எனும் வீட்டு உபயோகப் பொருள் கண்காட்சி, இந்த முறை வரும் 30ல் துவங்கி அக்., 3ல் நிறைவு பெறுகிறது. கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் மிக பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில், அனைத்து வகையான வீட்டு உபயோகப் பொருட்களையும் வாங்கலாம். அது மட்டுமா...? இந்த முறை 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சியுடன் 'பில்ட் எக்ஸ்போ' கண்காட்சியும் கைகோர்த்துள்ளது. வாழ்நாளில் சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டி, நடு ஹாலில் 'ஹாயாக' கால் நீட்டி படுக்கும் கனவு எவருக்குதான் இல்லை? ஆனால் அதை சாதிக்கும் வழிதான் பலருக்கு பெரும் சோதனையாக உள்ளது. மக்களின் இந்த பிரச்னையை எளிதில் தீர்த்து வைக்கும் வகையில், 'பில்ட் எக்ஸ்போ' எனும் பிரமாண்ட கட்டுமானப் பொருட்கள் கண்காட்சியையும் இதே நாட்களில் நடத்த முன்வந்துள்ளது 'தினமலர்'. கட்டுமானம் தொடர்பான அனைவரின் பிரச்னைகளுக்கும் நிரந்தர தீர்வு தருவதாக அமையும் இந்த கண்காட்சி. இந்த கண்காட்சியில் ரியல் எஸ்டேட் மற்றும் பில்டர் நிறுவனங்கள், நிலம் விற்பனையாளர்கள், பர்னிச்சர் தயாரிப்பாளர்கள், கட்டுமானம் மற்றும் வீட்டு உபயோகப் பொருள் தயாரிப்பாளர்கள், வீட்டு அலங்காரப் பொருள் தயாரிப்பாளர்கள்...இப்படி ஒரு வீடு அல்லது அலுவலக கட்டுமானம் தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் கட்டாயம் தீர்வு உண்டு. இரண்டு கண்காட்சிகளையும் குடும்பத்துடன் சோர்வில்லாமல் ஜாலியாக வலம் வர பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. வண்ண மீன்கள் துள்ளிக் குதிக்கும் மீன் கண்காட்சி, பெண்களை கவரும் மெகந்தி, குழந்தைகளுக்கான விளையாட்டுக்கள்...என, சுமார் 250 அரங்குகளுடன் உங்களை குடும்பத்துடன் மகிழ்விக்க பிரமாண்டமான முறையில் தயாராகி வருகிறது இந்த இரட்டை கண்காட்சி. கண்காட்சிக்கு வருபவர்கள் ருசிக்க, சுவையான 'புட்கோர்ட்டும்' உண்டு. என்ன வாசகர்களே...இப்போதே தயாராகி விட்டீர்களா? கொஞ்சம் பொறுத்திருங்கள் இன்னும் 4 நாட்கள்!







      Our Apps Available On




      Dinamalar

      Follow us