ADDED : செப் 25, 2011 12:48 AM
சாத்தான்குளம் : நல்லாசிரியர் விருதுபெற்ற சாத்தான்குளம் தூய இருதய பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா நடந்தது.சாத்தான்குளம் தூய இருதய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேவராஜ் தமிழக அரசின் ராதாகிருஷ்ணன் விருதுவழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து நல்லாசிரியர் விருதுபெற்ற தலைமையாசிரியர் தேவராஜ்க்கு பாராட்டு விழாநடந்தது. விழாவில் தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் இவான் அம்புரோஸ், சாத்தான்குளம் மறைமாவட்ட முதன்மைக்குரு எட்வர்ட், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், ஆசிரியர்கள்,பெற்றோர்கள், பழைய மாணவர்கள்,பள்ளிமாணவர்கள், மற்றும் ஊர் பெரியவர்கள் வாழ்த்துதெரிவித்து பரிசுப்பொருட்களை வழங்கி பாராட்டினர்.