/உள்ளூர் செய்திகள்/நாகப்பட்டினம்/மனு நீதி நாள் முகாம் கலெக்டர் பங்கேற்புமனு நீதி நாள் முகாம் கலெக்டர் பங்கேற்பு
மனு நீதி நாள் முகாம் கலெக்டர் பங்கேற்பு
மனு நீதி நாள் முகாம் கலெக்டர் பங்கேற்பு
மனு நீதி நாள் முகாம் கலெக்டர் பங்கேற்பு
ADDED : செப் 23, 2011 01:19 AM
வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த துளாசப்புரம் பஞ்சாயத்து யூனியன்
நடுநிலைப்பள்ளியில் மனுநீதி நாள் முகாம் நாகை கலெக்டர் முனுசாமி தலைமையில்
நேற்றுமுன்தினம் நடந்தது.
தாசில்தார் அசோகன் வரவேற்றார். எம்.எல்.ஏ.,
காமராஜ் முன்னிலை வகித்தார். முகாமில் மாற்றுத்திறனாளிகள் 18 பேருக்கும்
ரூபாய் ஆயிரம் உதவி தொகை வழங்குவதுக்கான உத்தரவையும், தலா ரூபாய் 25 ஆயிரம்
வீதம் இருவருக்கு திருமண நிதியுதவிக்கான காசோலைகளையும் மயிலாடுதுறை
எம்.பி., ஓ.எஸ்.மணியன் வழங்கினார். ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மூன்று
பெண்களுக்கு தையல் இயந்திரமும், ஆறு பேருக்கு பட்டா மாறுதலும், விவசாய துறை
சார்பில் ரூபாய் 75 லட்சம் மதிப்பில் 11 விவசாயிகளுக்கு ஆயில் இன்ஜின்,
தார்ப்பாய், ரோட்டவெட்டர், பவர் டில்லர், விசை தெளிப்பான் போன்றவை
வழங்கப்பட்டது. முகாமில் பொது மக்களிடம் இருந்து 175 மனுக்கள்
பெறப்பட்டதில், உடனடியாக 73 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மாவட்ட வழங்க அலுவலர் பரமசிவம் தலைஞாயிறு பஞ்சாயத்து யூனியன் தலைவர்
அமிர்தலிங்கம், பஞ்சாயத்து தலைவர் முருகையன், உதவி விவசாயத்துறை இயக்குனர்
மணிகண்டன் உட்பட அனைத்துதுறை அதிகாரிகள் பங்கேற்றனர். வி.ஏ.ஓ., சரவணமுத்து
நன்றி கூறினார்.