/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/வாலிபரை கொலை செய்ய முயன்ற ஐந்து பேருக்கு ஏழு ஆண்டுகள் சிறைவாலிபரை கொலை செய்ய முயன்ற ஐந்து பேருக்கு ஏழு ஆண்டுகள் சிறை
வாலிபரை கொலை செய்ய முயன்ற ஐந்து பேருக்கு ஏழு ஆண்டுகள் சிறை
வாலிபரை கொலை செய்ய முயன்ற ஐந்து பேருக்கு ஏழு ஆண்டுகள் சிறை
வாலிபரை கொலை செய்ய முயன்ற ஐந்து பேருக்கு ஏழு ஆண்டுகள் சிறை
திருவள்ளூர் : வரப்பில் மாடு மேய்த்ததால் ஏற்பட்ட தகராறில், வாலிபரை கொலை செய்ய முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, ஐந்து பேருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, திருவள்ளூர் விரைவு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
இதுகுறித்து, வெங்கல் போலீசார் வழக்கு பதிந்து ஐந்து பேரையும் கைது செய்தனர். இவ்வழக்கு, திருவள்ளூர் விரைவு கோர்ட்டில் நீதிபதி சாவித்ரி முன்னிலையில், நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சவுந்தரராஜன் ஆஜராகி வாதாடினார். விசாரணை முடிந்து, நீதிபதி சாவித்ரி தீர்ப்பளித்தார். தீர்ப்பில், வாலிபரை ஆயுதங்களால் கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக ஐந்து பேருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 4,500 ரூபாய் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும், 6 மாத சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, ஐந்து பேரையும் போலீசார் புழல் சிறைக்கு கொண்டு சென்றனர்.