விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 21, 2011 12:15 AM
பல்லடம் : கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்லடத்தில் தமிழ்நாடு விவசாயிகள்,
விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
' உழவர்
பாதுகாப்புத் திட்டத்தை சட்டமாக்க வேண்டும்; பாம்பு கடித்து உயிரிழக்கும்
விவசாயி, விவசாய தொழிலாளர் களுக்கு ரூ.மூன்று லட்சம் நஷ்ட ஈடு வழங்க
வேண்டும். விவசாயத் தொழிலாளர் குடும்பங்களை, வறுமைக்கோட்டுக்கு கீழ்
உள்ளோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்; உரம், விதை, பூச்சி மருந்துகளை மானிய
விலையில் வழங்க வேண்டும்,' என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்லடம் தாலுகா
அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர்
ஆர்ப்பாட்டம் நடத்தினர். விவசாயிகள் சங்க தலைவர் பழனிசாமி, விவசாய
தொழிலாளர் சங்க தலைவர் பழனிசாமி, பல்லடம் தாலுகா மா.கம்யூ., செயலாளர்
சத்தியமூர்த்தி, பொங்கலூர் ஒன்றிய மா.கம்யூ., செயலாளர் லோகநாதன் உட்பட பலர்
பங்கேற்றனர்.