ADDED : செப் 20, 2011 11:43 PM
ஆனைமலை : ஆனைமலை அடுத்த கோட்டூரில் தே.மு.தி.க., கட்சியின் 7ம் ஆண்டு
துவக்கவிழா கொண்டாடப்பட்டது.
தே.மு.தி.க., கட்சி 7ம் ஆண்டு துவக்கவிழா
ஆனைமலை ஒன்றியம் பொங்காளியூரில் நடந்தது. கோட்டூர் நகர செயலாளர்
ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். இதையொட்டி, இளம் விதவைப்பெண்ணின் மூன்று
வயது குழந்தைக்கு 5 ஆயிரம் ரூபாய் டிபாசிட் செய்து ரசீது வழங்கப்பட்டது.
மாற்றுதிறனாளி ஒருவருக்கு தையல் மிஷின் வழங்கப்பட்டது. பொங்காளியூர் அரசு
நடுநிலைப்பள்ளியில் படித்த மீனாட்சி என்ற மாணவி சோலார் ரயில் சிஸ்டம்
கண்டுபிடித்தற்காக அவருக்கு இரண்டு கிராம் தங்க நாணயம் பரிசாக
வழங்கப்பட்டது.