Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/சேலம் மாநகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஜெ., படத்துடன் மேயர் அறை முன் தர்ணா

சேலம் மாநகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஜெ., படத்துடன் மேயர் அறை முன் தர்ணா

சேலம் மாநகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஜெ., படத்துடன் மேயர் அறை முன் தர்ணா

சேலம் மாநகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஜெ., படத்துடன் மேயர் அறை முன் தர்ணா

ADDED : செப் 20, 2011 12:55 AM


Google News

சேலம்: சேலம் மாநகராட்சி மேயர் அறையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின், படத்தை வைக்க வேண்டும், என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று, அ.தி.மு.க., கவுன்சிலர்கள், மேயர் அறை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பை ஏற்று நான்கு மாதங்கள் ஆகிறது. சேலம் மாநகராட்சி, தி.மு.க., மேயர் ரேகாபிரியதர்ஷினி, அவரது அறையில், முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை வைக்காமல், முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின், வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோரது படங்களை வைத்துள்ளார். சேலம் மாநகர, அ.தி.மு.க., வினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. கடந்த மாதம், அ.தி.மு.க., கவுன்சிலர் மேயர் அறையில், ஜெயலலிதாவின் படத்தை வைப்பதற்காக வந்தனர். ஆனால், மாநகர், மாவட்ட செயலாளர் செல்வராஜின் உத்தரவை தொடர்ந்து, சிறிது நேரம் '÷ஷா' காட்டிவிட்டு அங்கிருந்து சென்றனர். மாநகராட்சி கமிஷனர் லட்சுமிப்பிரியாவிடம், அ.தி.மு.க., கவுன்சிலர்கள், புகார் தெரிவித்தனர்.



மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் இருந்து, மேயர் ரேகாபிரியதர்ஷினிக்கு, முறைப்படி கடிதம் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ரேகாபிரியதர்ஷினி தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கவில்லை. நேற்று, அ.தி.மு.க., கவுன்சிலர் எல்.வி.,பிரகாஷ், மாணிக்கம், பெருமாள்சாமி, பிரகாஷ்அப்பாத்துரை, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர், முதல்வர் ஜெயலலிதாவின் படத்துடன் மேயர் அறைக்குள் நுழைய முயன்றனர். ஆனால், மேயர் அறைப்பூட்டப்பட்டிருந்தது. அலுவலர்கள், 'சாவியை மேயர் எடுத்து சென்றுவிட்டதாகவும், மொபைல்ஃபோனில் தொடர்பு கொள்ள முடியவில்லை' என்றும் தெரிவித்தனர். காலை 12 மணியில் இருந்து மாலை 4 மணி வரை மேயர் அறைக்கு முன், ஜெயலலிதாவின் படத்துடன் அமர்ந்திருந்தனர். ஆனால், மேயர் ரேகாபிரியதர்ஷினி, மாநகராட்சி அலுவலகத்துக்கு வரவில்லை. வேறு வழியில்லாமல், அ.தி.மு.க., கவுன்சிலர்கள், மேயர் அறை நுழைவு வாயில், ஜெயலலிதாவின் படத்தை மாட்டி சென்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us