பிக்னிக் ஓட்டல் இடத்தை மீட்க நடவடிக்கை: தனி நீதிபதி உத்தரவு சரியே: ஐகோர்ட் தீர்ப்பு
பிக்னிக் ஓட்டல் இடத்தை மீட்க நடவடிக்கை: தனி நீதிபதி உத்தரவு சரியே: ஐகோர்ட் தீர்ப்பு
பிக்னிக் ஓட்டல் இடத்தை மீட்க நடவடிக்கை: தனி நீதிபதி உத்தரவு சரியே: ஐகோர்ட் தீர்ப்பு
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள பிக்னிக் ஓட்டல் அமைந்துள்ள இடத்தை மீட்க, சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கலாம் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறுக்கிட, சென்னை ஐகோர்ட் மறுத்து விட்டது.
சென்ட்ரல் ரயில் நிலையம், மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் கட்டடத்துக்கு இடையில், 'பிக்னிக்' ஓட்டல் அமைந்துள்ளது.
மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பானுமதி, ராஜேந்திரன் அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: அனைத்து அம்சங்களையும் பரிசீலித்து, தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். எந்த அம்சங்களையும் பரிசீலிக்காமல், அதிகார வரம்பை தவறாக பயன்படுத்தினால் தான், அந்த உத்தரவில் ஐகோர்ட் குறுக்கிட முடியும். மற்றபடி அவ்வளவு எளிதில் குறுக்கிட முடியாது. இந்த வழக்கை பொறுத்தவரை, பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடம், மனுதாரர்கள் வசம் உள்ளது. இதற்கு அவர்கள் அளிக்கும் மாத வாடகை 4,000 ரூபாய் தான். வழக்கின் தன்மையை கருத்தில் கொண்டு தான், மனுதாரர்கள் தடை உத்தரவு பெற உரிமையில்லை என, தனி நீதிபதி முடிவுக்கு வந்துள்ளார். அந்த உத்தரவில் குறுக்கிடத் தேவையில்லை. மனுதாரர்கள் கோரியபடி இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தால், சென்னை நகரின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு தடங்கல் ஏற்பட்டிருக்கும். இவ்வாறு 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.