Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/நல்லாசிரியர் விருது பெற்றஆசிரியருக்கு பாராட்டு

நல்லாசிரியர் விருது பெற்றஆசிரியருக்கு பாராட்டு

நல்லாசிரியர் விருது பெற்றஆசிரியருக்கு பாராட்டு

நல்லாசிரியர் விருது பெற்றஆசிரியருக்கு பாராட்டு

ADDED : செப் 12, 2011 02:25 AM


Google News
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, கோட்டை நகராட்சி உருது பெண்கள் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் நஸீருதின், தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். அவருக்கு, கிராம கல்வி குழு சார்பில் முக்கிய பிரமுகர்கள் பாராட்டு தெரிவித்தனர்.கிருஷ்ணகிரி, கோட்டை நகராட்சி உருது பெண்கள் நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருபவர் நஸீருதின். இவர் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக, தொண்டு நிறுவனங்களை அணுகி ஏழை எளிய மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். 32 ஆண்டு ஆசிரியராக பணியாற்றும் இவர் ஏற்கெனவே, 2009ம் ஆண்டு கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா சிறந்த தலைமையாசிரியர் விருது பெற்றுள்ளார்.

மேலும், 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் மாவட்ட அளவில் சிறந்த ஆசிரியருக்கான விருதை அப்போதைய கலெக்டரால் பெற்றுள்ளார்.

இவரது கல்வி சேவையை பாராட்டி, தமிழக அரசு இந்த ஆண்டுக்கான நல்லாசிரியர் விருது நஸீருதினுக்கு வழங்கியுள்ளது. இந்த விருது பெற்ற தலைமையாசிரியர் நஸீருதினை கிராம கல்வி குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், நகர பொதுமக்கள், பள்ளி ஆசிரியர்கள் , மாணவ மாணவிகள் பாராட்டி தங்களது வாழ்த்தை தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us