3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி : இங்கிலாந்து அணி வெற்றி
3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி : இங்கிலாந்து அணி வெற்றி
3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி : இங்கிலாந்து அணி வெற்றி
UPDATED : செப் 10, 2011 01:37 AM
ADDED : செப் 09, 2011 05:13 PM
லண்டன்: இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து களமிறங்கியுள்ள இந்திய அணி 50 வது ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்தது. ரகானே ரன் ஏதும் எடுக்காமலும், டிராவிட் 2 ரன்னிலும், பார்த்தீவ் பட்டேல் 3 ரன்னிலும், விராத் கோக்லி 7 ரன்களிலும் , சுரேஷ் ரெய்னா 21 ரன்களிலும் அவுட்டானார்கள். இன்னிலையில் கேப்டன் தோனி சிறப்பாக ஆடி தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். இப்போட்டியில் கேப்டன் தோனி 103 பந்துகளுக்கு 69 ரன்கள் எடுத்து ஆவுட்டானார். கேப்டன் தோனியை தொடர்ந்து ரவீந்தர் ஜடேஜா 43 ஓவரில் தனது அரைசதத்தை
பூர்த்தி செய்தார். இப்போட்டியில் ரவீந்தர் ஜடேஜா 89 பந்துகளுக்கு 78
ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இதன்படி இங்கிலாந்திற்கு வெற்றி இலக்காக 235 ரன்களை இந்தியா தீர்மானித்துள்ளது. ஒரு நாள் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதை தொடர்ந்து 235 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்து விளையாடி வந்தது . இந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதித்தது.பின்னர் டக்வர்த் லுயிஸ் முறை படி 43 ஓவரில் 218 ரன்கள் என்று தீர்மானிக்கபட்டது. இதன் படி இங்கிலாந்து அணி 41.5 வது ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியில் கிவிஸ்டர் அதிகபட்சமாக 51 ரன்கள் எடுத்தார்.