ADDED : செப் 06, 2011 11:44 PM
சென்னை: ஆழியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவை மாவட்டம், ஆழியாறு அணையில் இருந்து, ஆழியாறு படுகை பாசன அமைப்பின் கீழ் உள்ள பாசன சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிட கோரிக்கைகள் வந்தன. அதை ஏற்று, ஆழியாறு அணையில் இருந்து பொள்ளாச்சி கால்வாய், வேட்டைக்காரன் புதூர் கால்வாய், சேத்துமடைக் கால்வாய், ஆழியாறு ஊட்டுக் கால்வாய் மூலம், பாசனத்துக்காக, 75 நாட்கள், தேவைக்கேற்ப இடைவெளி விட்டு, 7ம் தேதி (இன்று) முதல் தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளேன். இதனால், கோவை மாவட்டத்தில், 22 ஆயிரத்து, 332 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்' என தெரிவித்துள்ளார்.