/உள்ளூர் செய்திகள்/சேலம்/கட்டுமான தொழிலாளர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்கட்டுமான தொழிலாளர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
கட்டுமான தொழிலாளர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
கட்டுமான தொழிலாளர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
கட்டுமான தொழிலாளர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 06, 2011 01:26 AM
சேலம் : செங்கல், மணல், சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி,
சேலத்தில் கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்க கூட்டமைப்பு சார்பில், கடந்த
அரசால் வழங்கப்பட்ட உத்தரவுகளை நடைமுறைப்படுத்தக்கோரியும், கட்டுமானப்
பொருட்களின் விலையை கட்டுப்படுத்தக் கோரியும், சேலம் கலெக்டர் அலுவலகம்
முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டத்தில், விபத்து நிதியாய் ஒரு லட்சம் பெற
பணியின் போது விபத்து நடந்தா தான் என்ற நிபந்தனையை நீக்கி, விபத்து எங்கு
நடந்தாலும் அதற்கான உதவித்தொகை வழங்க வேண்டும் என, கடந்த அரசின் உத்தரவை
அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியம் பெறும் வாரிய உறுப்பினர் இறக்க
நேரிட்டால், அவரது வாரிசுதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
வாரியத்தில் பதிவு செய்துள்ளவர்களை மட்டுமே அரசு கட்டுமான பணியில்
ஈடுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
முன்னாள் கட்டுமான நலவாரியத் தலைவர் பொன்குமார் தலைமை வகித்தார். மாநில
கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் காசிநாதன், வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன்,
செயலாளர் அண்ணாதுரை, பொருளாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள்,
தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


