பயண வேளையில் இரு விதமான உணர்வு ஏற்படுவது ஏன்?
பயண வேளையில் இரு விதமான உணர்வு ஏற்படுவது ஏன்?
பயண வேளையில் இரு விதமான உணர்வு ஏற்படுவது ஏன்?

லண்டன்:பொதுவாக நாம் ஒரு ஊருக்குச் செல்கிறோம்என்றால், போகும் போது நெடுநேரம் ஆவதுபோலவும், அங்கிருந்து திரும்பும் போது விரைவாகத் திரும்பி விடுவது போலவும் உணர்கிறோம்.இதற்கு என்ன காரணம் என்பதை, சமீபத்தியஆய்வு மூலம் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.நெதர்லாந்து நாட்டின் 'டில்பர்க் பல்கலைக்கழகம்' சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தியது.
பயணிகளிடம் பயண அனுபவம் குறித்து கேட்ட போது, புறப்பட்டுச் செல்லும் வேகத்தை விட, திரும்பி வரும்போது 22சதவீதம் அதிக வேகமாக திரும்பி விடுவதாகஅவர்கள் கூறினர்.பயணிக்கும் தூரம் மாறாமல் இருக்கும்போது, பயணிகள் இவ்வாறு உணர்வது ஏன்என ஆய்வு நடத்தப்பட்டது.அந்த ஆய்வில், பயணம் செய்வோர் பொதுவாகஇரு விதமான அனுபவங்களுக்குஆளாவது தெரியவந்துள்ளது.ஒருவர் ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லும் போது, செல்லும் இடம்எவ்வளவு தூரத்தில் இருக்கிறதோ, எவ்வளவுநேரம் ஆகுமோ என்ற கவலையும், செல்லும்இடத்திற்கான நேரம் பற்றிய குறைவான மதிப்பீடும் தான் காரணம்.அதாவது, செல்லும் இடம் 60 கி.மீ.,தூரம் இருந்தால் பயணி, 'என்ன ஒரு 30 கி.மீ.,தூரம் இருக்குமா' என்று தானாகவே மனக்கணக்குபோட்டுக் கொள்கிறார் என்பது தெரியவந்தது.