/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/சிறுவர்களின் எதிர்கால வாழ்க்கை : சாராய பேர்வழிகளின் வியாபார தந்திரம்சிறுவர்களின் எதிர்கால வாழ்க்கை : சாராய பேர்வழிகளின் வியாபார தந்திரம்
சிறுவர்களின் எதிர்கால வாழ்க்கை : சாராய பேர்வழிகளின் வியாபார தந்திரம்
சிறுவர்களின் எதிர்கால வாழ்க்கை : சாராய பேர்வழிகளின் வியாபார தந்திரம்
சிறுவர்களின் எதிர்கால வாழ்க்கை : சாராய பேர்வழிகளின் வியாபார தந்திரம்
ADDED : ஆக 17, 2011 03:41 AM
செஞ்சி : கணக்கன்குப்பம், கெங்கவரம் கிராமங்களில் கள்ளச்சாராய வியாபாரிகளின் சுயலாபத்திற்காக, சிறுவர்களின் வாழ்க்கையை சீரழித்து வருகின்றனர்.
செஞ்சி தாலுகா மலையரசன் குப்பம், கணக்கன்குப்பத்தை ஒட்டி உள்ள தேவதானம்பேட்டை மலைப் பகுதி காடுகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுகின்றனர். இங்கிருந்து கெங்கவரம், கணக்கன்குப்பம் புங்கன்காட்டிற்கும் சரக்கை கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். இப்பகுதியில் காய்ச்சும் சரக்கிற்கு 'கிக்' அதிகம் என்பதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்தும் ஏராளமானவர்கள் இங்கு வருகின்றனர். . இதனால் இங்குள்ள டாஸ்மாக் கடையை விட கள்ளச்சாரயம் விற்பவர்களுக்கு கூடுதலாக விற்பனை நடக்கிறது. சரக்கை காய்ச்சும் இடத்திலேயே பாக்கெட் தயாரித்து கோணிப்பைகளில் கடைகளுக்கு எடுத்து செல்கின்றனர். இதற்காக 14 முதல் 16 வயது உடைய சிறுவர்களை பயன்படுத்துகின்றனர். இரவு 8 மணிக்கு பிறகு காலை 7 மணிக்குள் இந்த சிறுவர்கள் மொபட் மூலம் சரக்கை கொண்டு சேர்க்கின்றனர். சிறுவர்கள் ஓட்டி செல்லும் மொபட்களில் பெரும்பாலும் பதிவு எண் இருப்பதில்லை. சரக்கை சரியாக கொண்டு சேர்த்தால் கணிசமான தொகை கிடைப்பதால், மேலும் பல சிறுவர்கள் இதில் ஈடுபடும் அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளது.மொபட்டில் கள்ளச்சாரயத்தை சிறுவர்கள் எடுத்து செல்வதை பார்க்கும் இப்பகுதி மக்கள் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு பயந்து சிறுவர்களை தடுத்து நிறுத்தவோ, கட்டுப்படுத்தவோ முடியாமல் உள்ளனர்.ஒரு புறம் சிறுவர்களின் வாழ்க்கை சீரழிந்து வரும் நிலையில் இங்கு குடிக்க வருபவர்களால் விவசாய நிலங்களும் சீர்கெட்டு வருகிறது. குடிப்பவர்கள் காலி பாக்கட்டுகளை விவசாய நிலங்களில் வீசி விட்டு செல்வதால் மண்ணின் தன்மை மாசடைந்து வருகின்றது.இப்பகுதியில் கள்ளச்சாராய விற்பனையை தடுப்பதற்கு போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் சிறுவர்களின் எதிர் கால வாழ்க்கை சீர்கெடுவதை தடுக்க முடியும்.


