Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மாஜி செயலர் பெகுராவின் ஜாமின் மனு தள்ளுபடி

மாஜி செயலர் பெகுராவின் ஜாமின் மனு தள்ளுபடி

மாஜி செயலர் பெகுராவின் ஜாமின் மனு தள்ளுபடி

மாஜி செயலர் பெகுராவின் ஜாமின் மனு தள்ளுபடி

ADDED : ஆக 12, 2011 02:28 AM


Google News
புதுடில்லி:ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, தொலைத் தொடர்புத் துறை முன்னாள் செயலர் பெகுராவின் ஜாமின் மனுவை, டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு வழக்கில், மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் செயலர் பெகுரா கைது செய்யப்பட்டுள்ளார். இவர், தனக்கு ஜாமின் வழங்கக்கோரி, டில்லி சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.இதைத் தொடர்ந்து, ஜாமின் கோரி,

டில்லி ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். பெகுரா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த விவகாரத்தில், பெகுராவுக்கு எந்த தொடர்பும் இல்லை. சி.பி.ஐ., அதிகாரிகள், பெகுராவின் பெயரை, தவறாக இந்த வழக்கில் சேர்த்துள்ளனர்' என்றார்.சி.பி.ஐ., சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'ஸ்வான் டெலிகாம் நிறுவனம், ஒதுக்கீட்டில் பயன் பெற வேண்டும் என்பதற்காக, உரிமங்கள் வழங்குவது தொடர்பான ஆவணத்தில், பெகுரா மாற்றங்கள் செய்தார்' என, தெரிவித்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று அளிக்கப்பட்டது. நீதிபதி பரிகோக், தன் உத்தரவில், 'ஸ்வான் டெலிகாம் நிறுவனம் பயன் அடைவதற்காக, பெகுரா, சதியில் ஈடுபட்டதாக, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு, மனுதாரரின் கோரிக்கையை, இந்த கோர்ட் நிராகரிக்கிறது' என்றார். இதைத் தொடர்ந்து, பெகுராவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us