Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/எளிதாக முன்னேற ஆங்கிலம் அவசியம் பாரதியார் பல்கலை., பேராசிரியர் பேச்சு

எளிதாக முன்னேற ஆங்கிலம் அவசியம் பாரதியார் பல்கலை., பேராசிரியர் பேச்சு

எளிதாக முன்னேற ஆங்கிலம் அவசியம் பாரதியார் பல்கலை., பேராசிரியர் பேச்சு

எளிதாக முன்னேற ஆங்கிலம் அவசியம் பாரதியார் பல்கலை., பேராசிரியர் பேச்சு

ADDED : ஆக 09, 2011 02:49 AM


Google News

கோவை : ''கல்வித் தகுதியை விட, ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளும் திறனும், பொது அறிவும் இருந்தால் வாழ்க்கையில் எளிதாக முன்னேறலாம்,'' என்று பாரதியார் பல்கலையின் சமூகவியல் துறை உதவி பேராசிரியர் சுரேஷ்பாபு பேசினார்.'இளைஞர்களை ஆற்றல்மிக்கவர்களாக மாற்றுவது' குறித்த கருத்தரங்கு, தாமஸ் கிளப்பில் நடந்தது.

பொறியியல் கல்லூரியில் கடந்த ஆண்டு நடந்த 'ராகிங்' சித்ரவதையை தாங்க முடியாமல், தற்கொலை செய்து கொண்ட ஜோதி எனும் மாணவியின் நினைவாக தமிழகம் முழுவதும் இது போன்ற பயிலரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பயிலரங்கில், பாரதியார் பல்கலையின் சமூகவியல் துறை உதவி பேராசிரியர் சுரேஷ்பாபு பேசினார். அவர் பேசுகையில், ''சமூகத்தின் ஒரு தரப்பினரால் மறுக்கப்படும் உரிமைகளை பெறவும், வாழ்வில் முன்னேறவும் கல்வி மட்டுமே துணை. கல்வி கற்றவர்களை எந்த சமுதாய வேறுபாடுகளும் நெருங்காது. சிறந்த கல்வித் தகுதிகளை பெற்றவராக இருந்தாலும், ஆங்கிலப் புலமை இல்லாவிட்டால் வீண். கல்வித் தகுதி இல்லாவிட்டாலும் ஆங்கில அறிவும் பொது அறிவும் இருந்தால் வாழ்வில் எளிதாக முன்னேறலாம்'' ''வாழ்வின் உயரங்களை அடைய வறுமையை ஒரு காரணமாக கூறக் கூடாது. வறுமையை ஒரு மூலதனமாக வைத்து முன்னேற வேண்டும். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, மன உறுதி, தியாக மனப்பான்மை இருந்தால் எப்பேர்பட்டவராக இருந்தாலும் வாழ்க்கையில் ஜெயித்து விட முடியும்,'' என்றார்.



திருச்சி பாரதிதாசன் பல்கலை உதவி பேராசிரியர் ராமஜெயம் ஆகியோர் மாணவர்களுக்கு ஊக்கம் அளித்து பேசினர். உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து பெங்களூர் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் மைய ஆராய்ச்சியாளர் வெங்கடேஷ், பி.எஸ்.ஜி., தொழில் நுட்பக் கல்லூரியின் நானோ டெக்னாலஜி துறை ஆராய்ச்சியாளர் செல்லசாமி ஆகியோர் பேசினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us