ADDED : ஆக 05, 2011 02:35 AM
மதுரை:மதுரை ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் கொலை வழக்கில், தி.மு.க., தலைமை
செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில்
அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை, ஏழு நாட்கள் போலீஸ் காவலில் விடக்கோரி, ஆறாவது
மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவனியாபுரம் போலீசார் மனு செய்தனர். இம்மனு நேற்று
விசாரணைக்கு வந்தது. எஸ்ஸார் கோபியை போலீசார் ஆஜர்படுத்தினர். போலீஸ்
காவலில் விடும் முடிவை ஆக.,8க்கு தள்ளி வைத்து மாஜிஸ்திரேட் டி.சுஜாதா
உத்தரவிட்டார்.