ADDED : ஆக 05, 2011 12:07 AM
ராமநாதபுரம்:பட்ஜெட்டில் புதிய வரிகள் இல்லாதது, சிறப்பு சலுகைகள்
உள்ளிட்டவை மகிழ்ச்சி அளிக்கிறது என மக்கள் கருத்து தெரிவித்தனர். ஜெகதீசன்
(ராமநாதபுரம் வர்த்தக சங்க தலைவர்) : புதிய வரிகள் இல்லாதது
வரவேற்கதக்கது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கூடுதல் போலீசார் நியமனம், மின்
உற்பத்தி அதிகரிப்பு ஆகிய அறிவிப்புகள் நிம்மதி தருகிறது. குறைந்த
வட்டியில் சிறு தொழில் முனைவோருக்கு கடன், கடலோர மாவட்டங்களில்
மீன்பதப்படுத்தும் தொழிற்சாலை, தமிழகத்தை இந்தியாவில் முதல் மாநிலமாக மாற்ற
முதல்வர் எடுத்துள்ள முயற்சியை வர்த்தக சங்கம் பாராட்டுகிறது.
ராமநாதபுரத்தில் அரசு மருத்துவ கல்லூரி குறித்து அறிவிப்பு இல்லாதது
ஏமாற்றமளிக்கிறது. எஸ்.லதா (குடும்பத்தலைவி): பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு
சலுகைகளுக்கு பாராட்டுகள். கல்வித்தரம் உயர்ந்து மக்களின் பொருளாதாரமும்
உயர வாய்ப்புள்ளது. கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை உட்பட பெண்கள்
முன்னேற்றத்திற்கான அறிவிப்புகள் மற்றும் புதிய வரிகள் விதிக்காதது
மகிழ்ச்சி அளிக்கிறது. விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைத்திருக்க அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவதாஸ் (மீனவர், ராமேஸ்வரம்): மீனவர்களுக்கு
சிறப்பு உதவித்தொகை 4 ஆயிரமாக உயர்த்தியிருப்பது பெரும் மகிழ்ச்சி.
மீன்பிடி இறங்கு தளம் ராமேஸ்வரத்தில் அமைக்காததது ஏமாற்றமளிக்கிறது. மற்ற
இடங்களில் உள்ளது போல், ராமேஸ்வரத்தில் தடுப்பு சுவர் அமைக்க நிதி
ஒதுக்காதது, வருத்தம். டீசல் மானியம் 1500 லிட்டருக்கு வழங்கப்பட்டு
வந்தது. இதை மூவாயிரம் லிட்டராக அதிகரித்து வழங்க
வேண்டும்.கருணாநிதி,வர்த்தக சங்க தலைவர், சிவகங்கை: பொதுமக்களுக்கும்,
வியாபாரிகளுக்கும் எந்தவித பாதிப்பு இல்லாத பொதுவான பட்ஜெட். பள்ளி,
கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப் - டாப் வழங்கும் திட்டம், விடுதி
மாணவர்களுக்கு உணவு செலவு தொகை உயர்வு, கல்வி உதவி தொகை உயர்வு போன்ற
அறிவிப்பால், எதிர்கால மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, திட்டங்கள்
தயாரிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், காஸ் சிலிண்டர் மீதான, மாநில அரசின்
வரிகுறைப்பை முதல்வர் ஜெ., செய்து விட்டார். புதிய பஸ்கள் அறிவிப்பு, சாலை
மேம்பாடு, கிராமப்புற கட்டமைப்பை மேம்படுத்துதல் போன்று தொலை நோக்கு
திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது பாராட்டத்தக்கது.''
என்றார்.எஸ்.பி.மணிகண்டன் (வக்கீல்), காரைக்குடி: புதிய பொது காப்பீடு
திட்டம் வரவேற்கதக்கது.
பள்ளி மாணவிகளுக்கு தற்போது 'சுடிதார்'
(யூனிபார்ம் ) அறிமுகப்படுத்தியதால், பெண்களின் நலனில் இந்த அரசு அக்கரை
காட்டுவதை உணர்த்துகிறது. பிளஸ் ஒன், பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்
தொகை, படப்படிப்பு முடித்த பெண்களின் திருமணத்திற்கு நான்கு கிராம் தங்கம்
வழங்குவது போன்ற திட்டங்கள் மிகவும் பயனுள்ளது.விவசாயத்தை ஊக்குவிக்கும்
வகையில் 100 சதவீத மானியம் வழங்கப்படுவது, விவசாய துறைக்கு ஒரு வளர்ச்சியை
ஏற்படுத்துவதோடு, உணவு உற்பத்தியும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
கவிதாரமேஷ், டாக்டர், காரைக்குடி: முன்மாதிரியான திட்டங்கள்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்கள், மகளிர் நலனுக்கு பல
திட்டங்கள் பயனுள்ளதாக நிறைவேற்றப்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் 75 சிறிய
மருத்துவமனைகள் அமைக்கப்படுவது வரவேற்கத்தக்கது. உலக சுகாதார மையம்
சார்பில் கர்ப்பிணிகளுக்கு ரூ. 12 ஆயிரம் வழங்குவது உலக அளவில் இதுவே முதன்
முறை.அனாவசியத்தை தவிர்த்து, அத்தியாவசியமான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது
வரவேற்கத்தக்கது.