Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பஸ் பயணிகளிடம் கொள்ளை 6 பேருக்கு 10 ஆண்டு சிறை

பஸ் பயணிகளிடம் கொள்ளை 6 பேருக்கு 10 ஆண்டு சிறை

பஸ் பயணிகளிடம் கொள்ளை 6 பேருக்கு 10 ஆண்டு சிறை

பஸ் பயணிகளிடம் கொள்ளை 6 பேருக்கு 10 ஆண்டு சிறை

ADDED : ஆக 03, 2011 01:37 AM


Google News

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே பஸ் பயணிகளிடம் கொள்ளையடித்த ஆறு பேருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவலை சேர்ந்த முனியசாமி, கோவிலாங்குளம் வீரபுத்திரன், பம்மனேந்தல் முருகேசன், வேப்பங்குளம் அரியப்பன், மதுரை கீரைத்துரை முத்துமணி, ஆழ்வார்புரம் முத்து ஆகியோர் 1998 பிப்., 3 ல், கர்நாடக மாநிலம் மங்களூருக்கு பஸ்சில் சென்றனர். மதுரையில் இருந்து மாலை 6 மணிக்கு கிளம்பி, இரவு 8.15 மணிக்கு வேடசந்தூர் கூம்பூர் அருகே சென்றது. டிரைவர் ஸ்ரீதர தேவடிகா, கண்டக்டர் கிருஷ்ணா கவுடா, பயணிகளை அரிவாளால் வெட்டிய ஆறு பேர் கும்பல், இரண்டு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். கூம்பூர் போலீசார் விசாரித்து, திண்டுக்கல் கூடுதல் சார்பு கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். ஆறு பேருக்கும் தலா 10 ஆண்டு சிறை; 1000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சுப்ரமணியன் உத்தரவிட்டார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us