ADDED : ஜூலை 31, 2011 03:04 AM
பொள்ளாச்சி : மார்க்கெட்டில் கிராக்கி நிலவுவதால், கொப்பரை விலை உயர்ந்து
வருகிறது.காங்கேயம் மார்க்கெட்டில், 23ம் தேதி நிலவரப்படி, கொப்பரை கிலோவு
க்கு 60 - 61 ரூபாய் கிடை த்தது. தேங்காய் எண்ணெய் 15 கிலோ டின்னுக்கு,
1,380, தேங்காய் பவுடர் கிலோவுக்கு, 102 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது.
பொள்ளாச்சி, உடுமலைப் பகுதிகளில் இருந்து, சென்னை உட்பட பகுதிகளுக்கு
அனுப்பும் தேங்காய் டன்னுக்கு, 16 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டது.
நேற்றைய நிலவரப்படி, கொப்பரை கிலோவுக்கு, 63 - 64, தேங்காய் எண்ணெய் 15
கிலோ டின்னுக்கு, 1,450, தேங்காய் பவுடர் கிலோவுக்கு, 100 ரூபாய்
கிடைத்தது. விவசாயிகள் சொந்தப் பொறுப்பில் பறித்து உரித்த தேங்காய்
டன்னுக்கு, 17 ஆயிரத்து 500 முதல் 18 ஆயிரத்து 500 வரை கிடைத்தது. காய்ந்த
தேங்காய் டன்னுக்கு, 19 ஆயிரத்து 500 கிடைத்தது. பொள்ளாச்சி, உடுமலைப்
பகுதிகளில் இருந்து உணவுத் தேவைக்காக அனுப்பும் தேங்காய் டன்னுக்கு, 17
ஆயிரம், விவசாயிகள் பறித்து இருப்பு வைத்துள்ள தேங்காய்க்கு, 10 முதல் 11
வரையும் கிடைத்தது. வியாபாரிகள் சொந்தப் பொறுப்பில் பறித்துக் கொள்ள
தேங்காய்க்கு, 9 முதல் 10 வரை வழங்கப்பட்டது.