/உள்ளூர் செய்திகள்/மதுரை/நலவாரியச் செயல்பாட்டை துரிதப்படுத்த வலியுறுத்தல்நலவாரியச் செயல்பாட்டை துரிதப்படுத்த வலியுறுத்தல்
நலவாரியச் செயல்பாட்டை துரிதப்படுத்த வலியுறுத்தல்
நலவாரியச் செயல்பாட்டை துரிதப்படுத்த வலியுறுத்தல்
நலவாரியச் செயல்பாட்டை துரிதப்படுத்த வலியுறுத்தல்
ADDED : ஜூலை 28, 2011 03:26 AM
மதுரை : முறைசாரா தொழிலாளர்களுக்கு புதிய அடையாள அட்டை, பணப்பலன் வழங்குதல்
போன்ற நலவாரிய செயல்பாடுகளை துரிதமாக வழங்க வலியுறுத்தி, மதுரையில்
சி.ஐ.டி.யு., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.சி.ஐ.டி.யு., நகர் செயலாளர்
விக்ரமன் பேசியதாவது:தமிழகத்தில் 2.5 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள்
உள்ளனர்.
இவர்களின் சமூக பாதுகாப்பிற்காக 14 தொழில் நல வாரியம்
உருவாக்கப்பட்டது. இதன் மூலம் பல சலுகைகள் கிடைத்தது. 2009ம் ஆண்டு அரசின்
உத்தரவின்படி தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்தில் அடையாள அட்டை, பணபலன்கள்
இரண்டு மாதங்களில் வழங்க வேண்டும். ஆனால் இந்த நடைமுறைகள் இதுவரையிலும்
பின்பற்றப்படவில்லை. பென்ஷன் ஆயிரம் ரூபாய், பெண் தொழிலாளர்களுக்கு 50
வயதில் பென்ஷன் போன்ற திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும்,
என்றார்.எம்.எல்.ஏ., அண்ணாதுரை, சி.ஐ.டி.யு., நகர் தலைவர் பிச்சை, மாவட்ட
தலைவர் கிருஷ்ணன், செயலாளர் இளங்கோவன், மாநில குழு உறுப்பினர் பழனியம்மாள்
உட்பட பலர் பங்கேற்றனர்.