/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சீன கிரைண்டர்கள் இறக்குமதி? ம.தி.மு.க., கடும் எதிர்ப்புசீன கிரைண்டர்கள் இறக்குமதி? ம.தி.மு.க., கடும் எதிர்ப்பு
சீன கிரைண்டர்கள் இறக்குமதி? ம.தி.மு.க., கடும் எதிர்ப்பு
சீன கிரைண்டர்கள் இறக்குமதி? ம.தி.மு.க., கடும் எதிர்ப்பு
சீன கிரைண்டர்கள் இறக்குமதி? ம.தி.மு.க., கடும் எதிர்ப்பு
ADDED : ஜூலை 27, 2011 02:38 AM
கோவை : கோவை மாநகர் மாவட்ட ம.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம், கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அவைத்தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்டச் செயலாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:மக்களுக்கு இலவச கிரைண்டர் வழங்கும் திட்டத்துக்கான டெண்டரை சில தனியார் நிறுவனங்கள் எடுத்துள்ளன. இவை, சீனாவில் இருந்து தரம் குறைந்த கிரைண்டர்களை இறக்குமதி செய்து அரசுக்கு சப்ளை திட்டமிட்டுள்ளன. இதனால், கோவையில் கிரைண்டர் தயாரிக்கும் தொழில் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு, தொழில் முனைவோர் நெருக்கடிக்கு உள்ளாவர். எனவே, சீனாவில் இருந்து தரம் குறைந்த கிரைண்டர்களை பெறுவதற்கு பதிலாக, கோவையிலுள்ள தொழிற்சாலைகளில் கிரைண்டர்களை பெற அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.கோவை மாநகராட்சி வார்டுகளை வரையறுக்க நடத்தப்பட்ட ஆய்வில் குளறுபடி நடந்துள்ளதால், ஆய்வு பணியை மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாநகர், மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.