Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோட்டில் 1.01 கோடி மரம் நடும் திட்டம் வேளாண் மந்திரி துவக்கிவைப்பு

ஈரோட்டில் 1.01 கோடி மரம் நடும் திட்டம் வேளாண் மந்திரி துவக்கிவைப்பு

ஈரோட்டில் 1.01 கோடி மரம் நடும் திட்டம் வேளாண் மந்திரி துவக்கிவைப்பு

ஈரோட்டில் 1.01 கோடி மரம் நடும் திட்டம் வேளாண் மந்திரி துவக்கிவைப்பு

ADDED : ஜூலை 27, 2011 12:48 AM


Google News

ஈரோடு:'பசுமை ஈரோடு' திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டத்தில் 1.01 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை, கோபியில் வேளாண் அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.இயற்கையை பாதுகாக்கவும், மரக்கன்றுகளை அதிகம் வளர்க்கவும், சுற்றுப்புறத்தை காக்கவும், 'பசுமை ஈரோடு' என்ற திட்டத்தை கலெக்டர் காமராஜ் அறிவித்தார்.

இத்திட்டத்தில் வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, வனத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து, இலவசமாக பொதுமக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மா, தென்னை, மூங்கில், வேம்பு, தேக்கு, புங்கன், புளி போன்ற பலன் தரும் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து வழங்க உள்ளனர்.'பசுமை ஈரோடு' திட்டத்தின் துவக்க விழா நேற்று கோபியில் ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதியில் நடந்தது. வேளாண் அமைச்சர் செங்கோட்டையன், மரக்கன்றை நட்டு, திட்டத்தை துவக்கி வைத்தார். அரசு அலுவலகங்கள், பள்ளி வளாகம், மாநகராட்சி, நகராட்சி, யூனியன், டவுன் பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து அலுவலகங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள், சாலை ஓரங்கள், வாய்க்கால் கரை ஓரங்கள், கோவில் வளாகம் மற்றும் வீடுகளில் காலியாக உள்ள இடங்களில் மரக்கன்றுகள் நடப்படும். பொதுமக்கள், மாணவ, மாணவியர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மகளிர் குழுக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் மரக்கன்றுகள் விநியோகிக்கப்படும். ஒவ்வொரு மாதமும் நடக்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டம், கிராமப்புறங்களில் நடக்கும் மனுநீதி நாள் முகாம்கள், விவசாயிகள் பங்கேற்கும் கருத்தரங்குகளில் மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

கோபியில் நடந்த தடப்பள்ளி, அரக்கன்கோட்டை விவசாயிகள் கருத்தரங்கில், இத்திட்டத்தின் கீழ் 2,000 மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு இலவசமாக, வேளாண் அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us