/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பாரதியார் பல்கலை "செஸ்' போட்டி துவக்கம்பாரதியார் பல்கலை "செஸ்' போட்டி துவக்கம்
பாரதியார் பல்கலை "செஸ்' போட்டி துவக்கம்
பாரதியார் பல்கலை "செஸ்' போட்டி துவக்கம்
பாரதியார் பல்கலை "செஸ்' போட்டி துவக்கம்
ADDED : ஜூலை 26, 2011 09:25 PM
கோவை : பாரதியார் பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான செஸ் போட்டி, இந்துஸ்தான் கலைக் கல்லூரியில் நேற்று துவங்கியது; வரும் 29ல் முடிவடைகிறது.பாரதியார் பல்கலை அளவிலான 2011-12ம் ஆண் டுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதன் துவக்கமாக, பல்கலை அளவிலான செஸ் போட்டி நான்காவது முறையாக இந்துஸ்தான் கலை கல்லூரியில் நேற்று துவங்கியது. இதில் முதல் இரண்டு நாட்களுக்கு குழு போட்டியும், அடுத்த இரண்டு நாட்களுக்கு தனி நபர் சாம்பியன் போட்டியும் நடக்கிறது. மொத்தம் 46 கல்லூரிகளைச் சேர்ந்த 262 மாணவர்கள் நேற்று பதிவுசெய்துள்ளனர்.துவக்க விழாவில், கல்லூரி முதல்வர் பாலுசுவாமி வரவேற்றார். ஐ.என்.எஸ்., அக்ரனி, நிர்வாக அலுவலர் கேப்டன் சிவ்லால் போட்டிகளை துவக்கி வைத்து பேசியது: பாடத்திட்டங்களுக்கு புறம்பான விளையாட்டு, கலை, ஓவியம் உள்ளிட்ட செயல்முறைகள், மனிதனின் ஆளுமையை வடிவமைக்கும் சிற்பிகளாக உள்ளன. இளைஞர்களுக்கு இன்றைய காலகட்டத்தில் விளையாட்டுத் துறை மூலமாக நிறைய வேலைவாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக, விளையாட்டுத் துறை அபரிமிதமான வளர்ச்சியடைந்து வருகிறது. செஸ் என்றால் தமிழ்நாடு என்று சொல்லும் அளவுக்கு விஸ்வநாதன் ஆனந்த் புகழ் பரவியுள்ளது. அவ்வழியில் புகழ் பெற மாணவர்கள் அனைவரும் முயற்சிக்க வேண்டும். மாணவர்கள் தம்மிடம் மறைந்துள்ள திறமை மற்றும் ஆற்றல்களை வெளிப்படுத்தி சாதனைகள் பல புரிய வேண்டும். தேசத்தின் வளர்ச்சியும், பெருமையும் ராணுவத்தை மட்டும் சார்ந்ததில்லை; விளையாட்டு வீரர்களின் சாதனையையும் பொறுத்தது.
செஸ் விளையாடும் மாணவர்களுக்கு சிந்தனை வளம் பெருகுவதுடன், உடல் நலனும் பாதுகாக்கப்படும், என்றார். கல்லூரி உடற்கல்வி இயக்குனர் கருணாநிதி நன்றி கூறினார்.வரும் 29ம் தேதி வரை நடக்கும் செஸ் போட்டி சுவிஸ் முறைப்படி நடத்தப்படுகிறது. குழு போட்டி ஏழு சுற்றுகளாகவும், தனிநபர் போட்டி ஒன்பது சுற்றுகளாகவும் நடக்கிறது.
குழு போட்டியில் வெற்றிபெறும் கல்லூரி அணிகளுக்கு வெற்றி கோப்பைகளும், முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பாரதியார் பல்கலை சான்றிதழ்களும் வழங்கப்படும். தனிநபர் போட்டியில் வெற்றிபெறும் முதல் ஆறு வீரர்களுக்கு பல்கலை சான்றிதழ், டிராக் சூட் மற்றும் அகில இந்திய பல்கலை செஸ் போட்டியில் பங்குபெற, பாரதியார் பல்கலையால் அனைத்து செலவுகளும் ஏற்கப்படும்.