ADDED : அக் 14, 2011 11:10 AM

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்த நடிகை ஆண்ட்ரியா, தேசிய விருதுப் புகழ் இயக்குனர் சாரதா நாராயணனின் திருப்பங்கள் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார் ஆண்ட்ரியா.
எத்தனைப் படங்கள் நடித்தாலும், இளமை ததும்பும் காதல் படங்களில் நடிக்கவே தான் விரும்புவதாக ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். நல்ல காதல கதைகள் வாய்க்கும் பட்சத்தில் சிறப்பாக நடிக்க காத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளது பற்றி கூறிய ஆண்ட்ரியா, மங்காத்தா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்ததற்கு இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் அஜித் மீது கொண்ட மரியாதை தான் காரணம் என்றார். ஓகே ஓகே படத்திலும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும். ஒரு படத்தில் லீட் ரோலில் நடிக்கிறோமா, கெஸ்ட் ரோலில் நடிக்கிறோமா என்பது முக்கியமல்ல. எவ்வளவு தூரம் அந்த கேரக்டர் பற்றி பேசப்படுகிறது என்பது தான் முக்கியம் என்கிறார் ஆண்ட்ரியா.


