/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஒரு தீபாவளிக்கு ஆசைப்பட்டு 5 ஆண்டுகளை வீணாக்கிக் கொள்ளக்கூடாதுஒரு தீபாவளிக்கு ஆசைப்பட்டு 5 ஆண்டுகளை வீணாக்கிக் கொள்ளக்கூடாது
ஒரு தீபாவளிக்கு ஆசைப்பட்டு 5 ஆண்டுகளை வீணாக்கிக் கொள்ளக்கூடாது
ஒரு தீபாவளிக்கு ஆசைப்பட்டு 5 ஆண்டுகளை வீணாக்கிக் கொள்ளக்கூடாது
ஒரு தீபாவளிக்கு ஆசைப்பட்டு 5 ஆண்டுகளை வீணாக்கிக் கொள்ளக்கூடாது
ADDED : அக் 14, 2011 01:47 AM
நெல்லிக்குப்பம் : இந்தியா ஒருங்கிணைந்து இருக்க காங்., மட்டுமே காரணமென
எம்.பி., அழகிரி கூறினார்.
நெல்லிக்குப்பம் நகர மன்றத் தலைவர் பதவிக்கு
போட்டியிடும் காங்., வேட்பாளர் மீண்டசெல்வத்தை ஆதரித்து எம்.பி., அழகிரி
பிரசாரம் செய்தார். நகர தலைவர் திலகர் தலைமை தாங்கினார். எம்.பி., அழகிரி
பேசியதாவது : மக்களுக்கு பல்வேறு பிரச்னைகள், தேடல்கள் உள்ளன. அதை தீர்க்க
எங்களால் மட்டுமே முடியும், சாதி, மதம், மொழியை சொல்லாமல் காங்., மட்டுமே
ஓட்டு கேட்கிறது. மக்களை இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என பிரித்து
பார்க்காமல் இந்தியராக மட்டுமே பார்க்கிறோம். நமது அண்டை நாடுகளில் எல்லாம்
ஜனநாயகம் இல்லை. இந்தியாவில் மட்டுமே ஜனநாயகம் உள்ளது. ரஷ்யா, பாகிஸ்தான்
போல் நாடு சிதறாமல், இலங்கைபோல் அழியாமல் இந்தியா ஒருங்கிணைந்து
ஒற்றுமையாக இருக்க காரணம் காங்., தான். மக்கள் தேர்தலைவிட தீபாவளியை
முக்கியமாக நினைக்கக் கூடாது. அந்த மனநிலை மாற வேண்டும. ஒரு தீபாவளிக்கு
ஆசைப்பட்டு ஐந்து ஆண்டுகளை வீணாக்கி கொள்ள கூடாது. காங்., கட்சி சார்பில்
நான் வென்றதால் தான் கடலூர் மாவட்டத்தில் மட்டும் மாணவர்களுக்கு கல்வி கடன்
நூறுகோடி பெற்று தர முடிந்தது. கடலூர் மாவட்டம் தொடர்ந்து வெள்ள பாதிப்பை
தடுக்க மத்திய அரசு மூலம் 300 கோடி ரூபா# ஒதுக்கப்பட்டு ஆற்றின் கரைகள்
பலப்படுத்தப்படுகிறது. கடலூரில் ரயில்வே சுரங்கப்பாதை பணி நடைபெற உள்ளது.
இதுபோன்று மத்திய அரசின் சிறப்பு நிதியை பெற்று முதன்மை நகராட்சியாக
உயர்த்த காங்கிரசை ஆதரிக்க வேண்டுமென எம்.பி., அழகிரி கூறினார்.


