/உள்ளூர் செய்திகள்/மதுரை/"ஊழலற்ற ஆட்சி, விரைவான சேவை' :தே.மு.தி.க., மேயர் வேட்பாளர் கவியரசு"ஊழலற்ற ஆட்சி, விரைவான சேவை' :தே.மு.தி.க., மேயர் வேட்பாளர் கவியரசு
"ஊழலற்ற ஆட்சி, விரைவான சேவை' :தே.மு.தி.க., மேயர் வேட்பாளர் கவியரசு
"ஊழலற்ற ஆட்சி, விரைவான சேவை' :தே.மு.தி.க., மேயர் வேட்பாளர் கவியரசு
"ஊழலற்ற ஆட்சி, விரைவான சேவை' :தே.மு.தி.க., மேயர் வேட்பாளர் கவியரசு
ADDED : அக் 06, 2011 04:13 AM
மதுரை : ''ஊழலற்ற ஆட்சி, விரைவான சேவைக்கு உத்திரவாதம் அளிக்கப்படும்.
ஐந்து மடங்கு உயர்ந்துள்ள வீட்டுவரி, 15 மடங்கு உயர்ந்துள்ள பாதாள சாக்கடை
பராமரிப்பு கட்டணத்தை மறுபரிசீலனை செய்து மக்கள் ஏற்கக்கூடிய வகையில்
நியாயமான வரி நிர்ணயிக்க நடவடிக்கை எடுப்பேன்,'' என, மதுரை மாநகராட்சி
தே.மு.தி.க., மேயர் வேட்பாளர் கா.கவியரசு உறுதியளித்தார். அவர் கூறியதாவது:
அனைத்து பகுதிகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தடையின்றி வழங்கப்படும்.
பாதாள சாக்கடை, சாலை வசதிகள் மேம்படுத்தப்படும். மண்டலங்களில் மக்கள் சேவை
பிரிவு ஏற்படுத்துவேன். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கொள்கைப்படி,
ஊழலற்ற ஆட்சி, விரைவான மக்கள் சேவைக்கு உத்திரவாதம் அளிக்கப்படும்.
தரைப்பாலங்கள் மேம்பாலங்களாகும். அன்றாடம் குப்பைகள் அகற்றப்படும். கொசு
உற்பத்தில் தடுக்கப்படும். தனியார் பள்ளிகளை விட மாநகராட்சி பள்ளிகளில்
கல்வி தரம் உயர்த்தப்படும். தனியார் மருத்துவமனைகள் போன்று மாநகராட்சி
மருத்துவமனைகள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும். கால்வாய்களில்
அடைப்புகளை நீக்கியும், தூர்வாரியும் கழிவு நீர் வெளியேற்ற நடவடிக்கை
எடுப்பேன். புதிய பாலங்கள், நடை மேம்பாலங்கள், கற்சாலைகள் அமைத்து
போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன். மீனாட்சி அம்மன்
கோயில், தெப்பக்குளம், காந்தி மியூசியத்தில் ஒளி-ஒலி காட்சி அமைப்பேன்.
கண்மாய் தூர் வாரி நிலத்தடி நீர் காக்கப்படும். தெருவிளக்குகள்
பராமரிக்கப்படும். மாநகராட்சியை முன் மாதிரியாக மாற்றுவேன், என,
உறுதியளித்தார்.


