ADDED : அக் 02, 2011 09:07 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளிலுள்ள அம்மன் கோவில்களில், நவராத்திரியையொட்டி சிறப்பு அலங்கார வழிபாடு நடக்கிறது.
பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், நவராத்திரியையொட்டி மாலை 6.00 மணிக்கு அபிஷேக அலங்கார பூஜை நடக்கிறது.
மாலை 7.00 மணிக்கு தினமும் ஒவ்வொரு தலைப்பில் பக்தி சொற்பொழிவு நடக்கிறது. ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் மாலை 6.00 மணிக்கு அலங்காரமும், கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. வடுகபாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், ஜோதிநகர் விசாலாட்சி உடமனர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் மாலை 6.00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது.
ரெட்டியாரூர் மாகாளியம்மன் கோவிலில், நடக்கும் நவராத்திரி விழாவில், இரவு 7.00 மணி சிறப்பு ஆராதனை சொற்பொழிவு நடக்கிறது. 5ம் தேதி வரை அபிஷேகம் மற்றும் கலை நிகழ்ச்சிகளும், 6ம் தேதி மஞ்சள் நீர், தேர் உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.


