/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மக்கள் நலப்பணியாளர்களுக்கு தடை எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்மக்கள் நலப்பணியாளர்களுக்கு தடை எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
மக்கள் நலப்பணியாளர்களுக்கு தடை எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
மக்கள் நலப்பணியாளர்களுக்கு தடை எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
மக்கள் நலப்பணியாளர்களுக்கு தடை எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
ADDED : செப் 30, 2011 01:16 AM
திருப்புத்தூர் : உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி மக்கள் நலப்பணியாளர்கள்வேலை உறுதி திட்டத்தில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டில் மக்கள் நலப்பணியாளர்கள் தி.மு.க., ஆட்சியின் போதுநியமனம் செய்யப்பட்டார்கள். ஊராட்சி சொத்துக்களை கண்காணிப்பது முதன்மையான பணியாகும். வேலைக்கு உறுதித் திட்டத்தில் பணி செய்பவர்களை கண்காணிக்கும் பொறுப்பும் கூடுதலாக இவர்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதால்,இவர்களை வேலை உறுதியளிப்பு திட்ட பணியில் ஈடுபடுத்துவதை தவிர்க்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்துஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மக்கள் நலப்பணியாளர்களை இப்பணியில் ஈடுபடக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர். திருப்புத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் கூடி வேலை நேரம் முழுவதும் வளாகத்தினுள் அமர்ந்திருந்தனர். தங்களுடைய பணியை செய்யவிடாமல் தடுத்ததற்கு அதிருப்தி தெரிவித்தனர். தி.மு.க., ஆட்சியால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதால் அக்கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வோம் என்ற அச்சத்தில் இப்படி எங்களுக்கு தடை விதிப்பது குறித்து வருத்தம் தெரிவித்தனர். இவர்களுக்கு மாற்றாக ஒன்றிய அலுவலக பொறியாளர் அலுவலகப் பணியாளர்கள் இத்திட்டத்தில் பணி செய்தனர்.