/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டும் வேட்பாளர்கள்முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டும் வேட்பாளர்கள்
முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டும் வேட்பாளர்கள்
முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டும் வேட்பாளர்கள்
முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டும் வேட்பாளர்கள்
ADDED : செப் 30, 2011 12:24 AM
ஓசூர்: ஓசூர் நகராட்சி தலைவர் தேர்லில் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில்
வேட்பாளர்கள், கூட்டமாக செல்லாமல் நெருக்கமான சிலருடன் சென்று அனைத்து
வார்டுகளிலும் செல்வாக்குள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி
வருகின்றனர்.
ஓசூர் நகராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க., சார்பில்
மாதேஸ்வரன், அ.தி.மு.க., வில் பாலகிருஷ்ணரெட்டி, தே.மு.தி.க., வில்
சந்திரன், பா.ம.க, வில் ஜெயபிரகாஷ் போட்டியிடுகின்றனர். கடந்த காலத்தில்
தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் ஆதரவாளர்களுடன் கூட்டமாக சென்று
ஆர்ப்பாட்டம், ஆரவாரத்துடன் சென்று ஆதரவு திரட்டுவார்கள். பெண்கள் ஆதரத்தி
எடுத்து வேட்பாளர்களை வரவேற்பார்கள். முதியோர்கள் காலில் தேர்தலுக்காக
வேட்பாளர்கள் விழுந்து ஆசி வாங்கி செல்வார்கள். தற்போது உள்ளாட்சி
தேர்தலில் இதுபோன்ற வழக்கமான தேர்தல் பிரச்சாரம் குறைந்துள்ளது. குறிப்பாக
ஓசூர் நகராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சியினரை
கூட்டமாக அழைத்து சென்று தேர்தல் பிரச்சாரம் செய்யாமல் மொபைல்ஃபோன்
மூலமும், நேரடியாகவும் ஆதரவு திரட்டி வருகின்றனர். முதற்கட்ட தேர்தல்
பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் அனைத்து வார்டுகளிடம் சுற்றுப்பயணம்
மேற்கொண்டு, அப்பகுதியில் செல்வாக்கு உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து
நலம் விசாரித்து தங்களுக்கு ஆதரவு தர வலியுறுத்தி வருகின்றனர். அதே போல்
இது உள்ளாட்சி தேர்தல் என்பதால், வேட்பாளர்கள் மாற்று கட்சியினரையும்
வழியில் கண்டால் அவரையும் நலம் விசாரித்து கட்சிக்கு அப்பார்ப்பட்டு
தங்களுக்கு ஓட்டு போடும்படி கேட்டு கொள்கின்றனர். ஆட்டம், பாட்டம்
ஆர்ப்பாட்டத்துடன் சென்றால் பொதுமக்கள் முகம் சுளிப்பார்கள் என நினைத்து
வேட்பாளர்கள், அமைதியான முறையில் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில்
வி.ஐ.பி., பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவது நல்ல வரவேற்பை
பெற்றுள்ளது.