ADDED : செப் 29, 2011 09:23 AM
இஸ்லாமாபாத்: எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக 11 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்தனர்.
மீனவர்களின் 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் அனைவரும் கராச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்தியா மற்றும் பாகிஸ்தான் சிறைகளில் இருநாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் பல ஆண்டுகளாக அடைபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.