ADDED : செப் 09, 2011 01:27 AM
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம், காவிரி ரயில்வே ஸ்டேஷனில் ரயில் மோதிய
விபத்தில், அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் உடல் சிதறி பலியானார்.
பள்ளிபாளையம், காவிரி ரயில்வே ஸ்டேஷன் அருகே நேற்று மாலை 5 மணியளவில்,
ஈரோடு நோக்கி சரக்கு ரயில் ஒன்று சென்றது. அப்போது, தண்டவாளத்தில் நடந்து
சென்ற வாலிபர் மீது ரயில் மோதியது. அதில், வாலிபர் உடல் சிதறி சம்பவ
இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விபரம் எதுவும் தெரியவில்லை. நீல
நிற ஜீன்ஸ் பேண்ட், சிவப்பு கட்டம் போட்ட சட்டை, காலில் ரப்பர் செருப்பு
அணிந்திருந்தார். பிரேதத்தைக் கைப்பற்றி, ஈரோடு ரயில்வே போலீஸார் விசாரணை
நடத்தி வருகின்றனர்.


