/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தூக்குத்தண்டனைக்கு தடை பா.ம.க., ஆர்ப்பாட்டம்தூக்குத்தண்டனைக்கு தடை பா.ம.க., ஆர்ப்பாட்டம்
தூக்குத்தண்டனைக்கு தடை பா.ம.க., ஆர்ப்பாட்டம்
தூக்குத்தண்டனைக்கு தடை பா.ம.க., ஆர்ப்பாட்டம்
தூக்குத்தண்டனைக்கு தடை பா.ம.க., ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 06, 2011 01:03 AM
திருநெல்வேலி : நெல்லையில் தூக்குத்தண்டனைக்கு நிரந்தர தடை விதிக்க வலியுறுத்தி பா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மனித உரிமைகளுக்கு எதிரான தூக்குத்தண்டனை விதிப்பு முறையை ரத்து செய்வது, தூக்குத்தண்டனைக்கு நிரந்தர தடை விதிப்பது, ராஜிவ் கொலை வழக்கு கைதிகள் பேரறிவாளன், முருகன், சாந்தனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாளை. ஜவகர் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்டச்செயலாளர் சீயோன் தங்கராஜ் தலைமை வகித்தார். மாநில துணை பொதுச்செயலாளர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி செயலாளர் செல்வின் சுரேஷ், பாளை. பகுதி செயலாளர் அழகர், தலைவர் ரவிசிங், நிர்வாகிகள் ரமேஷ்பாபு, முருகன், மோசஸ், லிங்கம், சேவியர், முத்து உட்பட பலர் பேசினர்.