/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/சாலையில் பிளவு போக்குவரத்து பாதிக்கும் அபாயம்சாலையில் பிளவு போக்குவரத்து பாதிக்கும் அபாயம்
சாலையில் பிளவு போக்குவரத்து பாதிக்கும் அபாயம்
சாலையில் பிளவு போக்குவரத்து பாதிக்கும் அபாயம்
சாலையில் பிளவு போக்குவரத்து பாதிக்கும் அபாயம்
ADDED : ஆக 28, 2011 11:23 PM
கூடலூர் : கூடலூர் நாடுகாணி சாலையில் திடீர் பிளவு ஏற்பட்டுள்ளதால், மூன்று மாநில போக்குவரத்து பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி, தமிழகம், கேரளம், கர்நாடக மாநில எல்லையாக உள்ளதால், வாகனங்கள் அதிகளவு சென்று வருகின்றன. கடந்த 24ம் தேதி பெய்த கன மழையில், கோழிக்கோடு சாலை நாடுகாணி பகுதியில், பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு முழுவதும் தொடர் மழை பெய்ததால், அண்ணாநகர் பாப்சன் எஸ்டேட் அருகேயுள்ள சாலையில், அடுத்தடுத்த இரு இடங்களில் பிளவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில், சாலை பாதிக்கப்பட்டு, முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் உள் ளது. கூடலூர் நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளர் கண்ணப்பன், உதவி பொறியாளர் சுரேஷ்குமார் மற்றும் ஊழியர்கள் நேற்று ஆய்வு செய்து, தடுப்பு நடவடிக்கை மூலம், வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்தனர். சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என, இவர்கள் தெரிவித்தனர்.