/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நிலம் ஆக்ரமிப்பு செய்தவர்களுக்கு தி.மு.க.உடந்தையாக இருக்கிறதுநிலம் ஆக்ரமிப்பு செய்தவர்களுக்கு தி.மு.க.உடந்தையாக இருக்கிறது
நிலம் ஆக்ரமிப்பு செய்தவர்களுக்கு தி.மு.க.உடந்தையாக இருக்கிறது
நிலம் ஆக்ரமிப்பு செய்தவர்களுக்கு தி.மு.க.உடந்தையாக இருக்கிறது
நிலம் ஆக்ரமிப்பு செய்தவர்களுக்கு தி.மு.க.உடந்தையாக இருக்கிறது
ADDED : ஆக 03, 2011 12:30 AM
குற்றாலம் : நிலம் ஆக்ரமிப்பு செய்தவர்களுக்கு தி.மு.க.உடந்தையாக இருக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூ.,மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் கூறினார்.
மா.கம்யூ.,மாநில கூட்டம் குற்றாலத்தில் துவங்கியது. கூட்டம் நாளை (4ம் தேதி) வரை நடக்கிறது. இதில் கட்சியின் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: ''தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றதற்கு காரணம் மத்திய, மாநில அரசுகளின் ஊழல்கள்தான். கடந்த தி.மு.க.ஆட்சியில் அப்பாவி மக்கள் நிலங்கள் அடிமாட்டு விலைக்கு அடித்து பறிக்கப்பட்டது. கோயம்புத்தூரில் நடந்த தி.மு.க.பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் கருணாநிதி தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்வதாகவும், இதனை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என்றும் கூறினார். அப்படி என்றால் நில ஆக்ரமிப்பை தி.மு.க.வரவேற்கிறதா? இதிலிருந்து நில ஆக்ரமிப்புக்கு செய்தவர்களுக்கு தி.மு.க.உடந்தையாக இருக்கிறது என்று தெரிகிறது. சமச்சீர் கல்வியின் முக்கியமான பொது பாடத்தை அமல்படுத்த வேண்டும். சமச்சீர் கல்வி திட்டத்தை மாநில அரசு அமல்படுத்த வலியுறுத்துகிறோம். இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வந்து இங்குள்ள முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களுக்கு ஓய்வூதியமாக முன்பு 400 ரூபாய் வழங்கப்பட்டது. தற்போது அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதனை வரவேற்று முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்கிறோம்'' என்றார்.