ADDED : ஜூலை 21, 2011 11:36 AM
சென்னை : நேற்று குறைந்த தங்கம், வெள்ளி விலையில் இன்று மீண்டும் உயர்வு காணப்படுகிறது.
நேற்று சவரனுக்கு ரூ.160 குறைந்த தங்கம் விலை, இன்று ரூ.152 உயர்ந்துள்ளது. இதே போன்று நேற்று ரூ.1605 குறைந்த பார் வெள்ளி விலை, இன்று ரூ.1895 அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம்(22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2181 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.23325 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.17448க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.63.85 ஆகவும், பார் வெள்ளி விலை ரூ.59695 ஆகவும் உள்ளது.