/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/அரசு கேபிள் "டிவி' க்கு அதிக தொகை வசூல்அரசு கேபிள் "டிவி' க்கு அதிக தொகை வசூல்
அரசு கேபிள் "டிவி' க்கு அதிக தொகை வசூல்
அரசு கேபிள் "டிவி' க்கு அதிக தொகை வசூல்
அரசு கேபிள் "டிவி' க்கு அதிக தொகை வசூல்
ADDED : அக் 04, 2011 11:37 PM
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு கேபிள் 'டிவி' இணைப்பிற்கு,
கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அரசு கேபிள் 'டிவி'
இணைப்பு, செப்., 2 ல் நடைமுறைக்கு வந்தது. சில வாரம் கட்டண சேனல் இன்றி
ஒளிபரப்பப்பட்டு, பின் சேர்க்கப்பட்டன. அரசு நிர்ணயித்த 70 ரூபாய் மட்டுமே
இணைப்புதாரர்களிடம் பெறவேண்டும். இதில், 50 ரூபாயை ஆப்பரேட்டர்கள்
எடுத்துக்கொண்டு, 20 ரூபாயை அரசுக்கு செலுத்தினால் போதும் என,
அறிவிக்கப்பட்டது.
ஆனால், 'ஒளிபரப்பு செலவுகளை சமாளிக்க முடியவில்லை,' என, சிறிய
ஆப்பரேட்டர்கள் புலம்புகின்றனர். சிலர், நிர்ணய கட்டணத்தை விட கூடுதலாக
வசூலிக்கின்றனர்.'கட்டண சேனல் ஒளிபரப்புகிறோம்,' எனக்கூறி 130 ரூபாய் வரை
கேட்கின்றனர். ஆனால், '70 ரூபாய்க்கு மேல் தரமுடியாது,' என, மக்கள்
கூறுகின்றனர். சில ஆப்பரேட்டர்கள் மிரட்டுவதால், கடும் அதிருப்தி
ஏற்பட்டுள்ளது.


