3வது நாளாக தொடரும் உள்ளிருப்பு போராட்டம்
3வது நாளாக தொடரும் உள்ளிருப்பு போராட்டம்
3வது நாளாக தொடரும் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : செப் 28, 2011 02:11 PM
திருநெல்வேலி: நெல்லை வி.கே.
புரம் மில் தொழிலாளர்களின் உள்ளிருப்பு போராட்டம் 3வது நாளாக தொடர்கிறது. நெல்லை வி.கே.புரத்தில் உள்ள மதுரா கோட்ஸ் மில் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக தொழிலாளர்களின் குடும்பத்தினரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இப்போராட்டம் இன்று 3வது நாளாக தொடர்கிறது. உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக சிலர் மயக்கமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.