ரூ. 20 லட்சம் மதிப்பு சிகரெட் பறிமுதல்
ரூ. 20 லட்சம் மதிப்பு சிகரெட் பறிமுதல்
ரூ. 20 லட்சம் மதிப்பு சிகரெட் பறிமுதல்
ADDED : செப் 21, 2011 09:19 PM
தூத்துக்குடி: சிங்கப்பூரிலிருந்து கப்பலில் தூத்துக்குடி கடத்திவரப்பட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிகரெட்டை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்திற்கு சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சரக்கு பெட்டகத்தை சுங்கத்துறை அதிகாரிகள் திறந்து பார்த்தனர். அவற்றில், பிஸ்கட்டுகள் இருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், உள்ளே சோதனையிடப்பட்டபோது 630 பெரிய பெட்டிகளில் பிஸ்கட்டுகளும், 30 பெரிய பெட்டிகளில் இந்தோனேஷியா, குடூஸில் தயாரிக்கப்பட்ட முதல் தரமான'பில்டர்' சிகரெட்டுகளும் இருந்தன. இவற்றின் மதிப்பு மதிப்பு 20 லட்சம் ரூபாய். வரிமோசடி செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட அந்த சரக்கு பெட்டகத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இறக்குமதி செய்த சென்னை நிறுவனம் குறித்து விசாரித்துவருகின்றனர்.