/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடியில் ஆசிரியர் கவுன்சிலிங் நிறைவுதொடக்க கல்வியில் கடைசி நாளில் திடீர் சலசலப்புதூத்துக்குடியில் ஆசிரியர் கவுன்சிலிங் நிறைவுதொடக்க கல்வியில் கடைசி நாளில் திடீர் சலசலப்பு
தூத்துக்குடியில் ஆசிரியர் கவுன்சிலிங் நிறைவுதொடக்க கல்வியில் கடைசி நாளில் திடீர் சலசலப்பு
தூத்துக்குடியில் ஆசிரியர் கவுன்சிலிங் நிறைவுதொடக்க கல்வியில் கடைசி நாளில் திடீர் சலசலப்பு
தூத்துக்குடியில் ஆசிரியர் கவுன்சிலிங் நிறைவுதொடக்க கல்வியில் கடைசி நாளில் திடீர் சலசலப்பு
ADDED : செப் 21, 2011 12:57 AM
தூத்துக்குடி: தூத்துக்குடியில் தொடக்க கல்வி ஆசிரியர் கவுன்சிலிங்கின்
நிறைவு நாளில் நேற்று சிறிது சலசலப்பு ஏற்பட்டதால் போலீசார் வந்து
அமைதிப்படுத்தும் நிலை ஏற்பட்டது. இறுதியில் கேட்ட இடத்திற்கு மாறுதல்
கிடைத்த மகிழ்ச்சியில் ஆசிரியர்கள் குஷியுடன் திரும்பினர்.தூத்துக்குடி
சி.வ அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று முதுகலை ஆசிரியர், பட்டதாரி
ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர், இடைநிலை ஆசிரியர், சிறப்பாசிரியர்,
உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கவுன்சிலிங்
முதன்மை கல்வி அதிகாரி பரிமளா தலைமையில் நடந்தது.
நூற்றுக்கணக்கான ஆசிரிய,
ஆசிரியைகள் கவுன்சிலிங்கிற்கு வந்திருந்தனர். அரசின் விதிமுறைப்படி
இவர்களுக்கு மாறுதல் உத்தரவுகள் வழங்கப்பட்டன. மாறுதல் உத்தரவுகளை சி.இ.ஓ
பரிமளா வழங்கினார். நேர்முக உதவியாளர்கள் குமாரதாஸ், ரத்தினம்,
கண்காணிப்பாளர் முனியப்பன் மற்றும் சி.இ.ஓ அலுவலக ஊழியர்கள் கலந்து
கொண்டனர். இறுதி நாளான நேற்று இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம்
மாறுதல், பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் மாவட்ட
தொடக்க கல்வி அதிகாரி (பொ) பெருமாள்சாமி தலைமையில் நடந்தது.
காலையில்
இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் நடந்ததால் பிற
மாவட்டங்களில் இருந்து தங்களது சொந்த மாவட்டத்தில் பணி கிடைக்கும் என்கிற
ஆர்வத்தில் ஏராளமான ஆசிரியைகள் வந்திருந்தனர். இதனால் கூட்டம் நிரம்பி
வழிந்தது. சீனியார்டி படி பத்து ஆண்டுகளுக்கு மேல் பணி செய்தவர்கள், அதற்கு
குறைவாக பணி செய்தவர்கள் வரிசைப்படி வருமாறு கல்வித்துறை மூலம்
அழைக்கப்பட்டனர். ஆனால் ஆர்வத்தில் ஆசிரியர்கள் கவுன்சிலிங் நடக்கும்
இடத்திற்குள் செல்ல முயன்றனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு
ஏற்பட்டது.இதற்கிடையில் கவுன்சிலிங்கில் நேற்று முன்தினம் காட்டப்பட்ட
இடங்களை விட குறைவான காலியிடம் உள்ளதாக ஆசிரியர் சங்கத்தினர் புகார் கூறி
ஆவேசமாக அந்த பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். இதனால்
கவுன்சிலிங்கில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசாருக்கு
தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வந்து ஒழுங்குபடுத்தினர். இதனால் சிறிது
நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மீண்டும் கவுன்சிலிங் மாவட்ட
தொடக்க கல்வி அதிகாரி பெருமாள்சாமி தலைமையில் தொடர்ந்தது.நேர்முக உதவியாளர்
முத்துக்கிருஷ்ணன், உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் அன்பு, தாசன்பொன்ராஜ்,
சுடலைமணி, பாலசுப்பிரமணியன், ஜெயபால், செல்வக்குமார், தொடக்க கல்வி அலுவலக
கண்காணிப்பாளர்கள் கந்தசாமி, சுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள்
கவுனின்சிலிங் முறைகள் குறித்து எடுத்துக் கூறினர்.
இதனை தொடர்ந்து
ஆசிரியர்கள் கவுன்சிலிங் நடந்தது. வெளி மாவட்டத்தை சேர்ந்த பலருக்கு சொந்த
மாவட்டமான தூத்துக்குடிக்கு வரும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களுக்கு கேட்ட
இடத்திற்கு மாறுதல் கிடைத்ததால் அவர்கள் குஷியடைந்தனர். மாறுதல் உத்தரவை
டி.இ.இ.ஓ பெருமாள்சாமி வழங்கினார். நேற்றுடன் ஆசிரியர் கவுன்சிலிங் நிறைவு
பெற்றது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் பயன் பெற்றனர்.