ADDED : செப் 20, 2011 09:31 PM
ராஜபாளையம்:ராஜபாளையம் ஸ்ரீராமதனலட்சுமி ஆரம்ப பள்ளியில் மாணவர் மன்ற
கூட்டம் நடந்தது தலைமை ஆசிரியர் முரளிதரன் தலைமை வகித்தார்.
மாணவி
ஜெயலட்சுமி வரவேற்றார். கல்வியுடன் மற்ற திறமைகளை வளர்த்து கொள்வது
குறித்து முன்னாள் கவுன்சிலர் நாகலட்சுமி பேசினார். மாணவர்களின்
கலைநிகழ்ச்சிகள் நடந்தன. கலந்துகொண்ட மாணவர்களுக்கு ஆங்கில இலக்கணம்
மற்றும் வாய்ப்பாடு புத்தகம் வழங்கப்பட்டது. ஆசிரியர் அங்குராஜ் நன்றி
கூறினார்.