Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சர்வதேச ஓசோன் தினம்

சர்வதேச ஓசோன் தினம்

சர்வதேச ஓசோன் தினம்

சர்வதேச ஓசோன் தினம்

ADDED : செப் 20, 2011 06:34 PM


Google News

கோவை: குனியமுத்தூர் அருகே ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில், 'சர்வதேச ஓசோன் தினம்' கொண்டாடப்பட்டது.

ஓசோன் படலம் பாதுகாப்பை வலியுறுத்தி, முதுநிலை சமூகப்பணித்துறை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் பொதுமக்களிடம் துண்டுப்பிரசாரத்தின் மூலம் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தினர். பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது, குப்பை எரிக்கக் கூடாது, தேவையின்றி வாகனங்களை பயன்படுத்த கூடாது, மரங்களை நடவேண்டும், சுற்றுப்புற மாசுபடுதலை தவிர்க்க வேண்டும் ஆகியவற்றை சுந்தராபுரம் பொதுமக்களிடையே எடுத்துரைத்தனர்.

நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் சுந்தரராமன், சமூகப்பணித்துறை தலைவர் பேராசிரியர் அழகர்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us