/உள்ளூர் செய்திகள்/மதுரை/பொற்றாமரைக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க தீர்வுபொற்றாமரைக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க தீர்வு
பொற்றாமரைக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க தீர்வு
பொற்றாமரைக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க தீர்வு
பொற்றாமரைக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க தீர்வு
ADDED : செப் 20, 2011 02:10 AM
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க, சிமென்ட் தரையை அகற்றிவிட்டு, களிமண்ணை அடிப்படையாக வைத்து தண்ணீர் தேக்கலாம் என இந்திய தொழில்நுட்ப நிறுவனம் ஆலோசனை தெரிவித்தது.
இருபது ஆண்டுகளுக்கு முன், இக்குளத்தில் சிமென்ட் பூசப்பட்டு, ஆழ்குழாய்கள் மூலம் தண்ணீர் விடப்பட்டு, தொட்டியாக மாற்றப்பட்டது. தரைக்கு அடியில் தண்ணீர் ஊற வாய்ப்பில்லாமல் போனதாலும், கோயிலைச் சுற்றி பல நூறு அடிகளுக்கு ஆழ்குழாய் அமைத்ததாலும், கோயில் தூண்களில் விரிசல் ஏற்பட்டது. கும்பாபிஷேகத்தின் போது இவை சரிசெய்யப்பட்டன.தண்ணீர் தேங்கியிருப்பதால் பாசி படர்ந்து, குளத்தின் அழகையும் கெடுத்தது. இதை தவிர்க்க, சிமென்ட் தளத்தை அகற்றி, நிரந்தரமாக தண்ணீர் தேக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. சில மாதங்களுக்கு முன், குளத்தின் ஓரத்தில் பள்ளம் தோண்டி, நிரந்தரமாக தண்ணீர் தேக்கும் பரிசோதனை நடந்தது. ஆனால், எதிர்பார்த்த அளவு தீர்வு கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து, இரு வாரங்களுக்கு முன், சென்னையில் உள்ள இந்திய தொழில் நுட்ப நிறுவன அதிகாரிகள் குழு பொற்றாமரைக்குளத்தை ஆய்வு செய்தது. தற்போது அறிக்கையை கோயில் நிர்வாக அதிகாரி ஜெயராமனிடம் வழங்கியுள்ளது. அதில், களிமண்ணை அடிப்படையாக கொண்டு சில தொழில்நுட்ப முறையில் நிரந்தரமாக தண்ணீர் தேக்கும் வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் அளிக்கும்படி இந்து சமய அறநிலையத்துறை கமிஷனருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. 'ஒப்புதல் அளித்தால் மட்டுமே, ப்படி நிரந்தரமாக தண்ணீர் தேக்கப்படும் என்பது குறித்த விபரங்களை தெரிவிக்க முடியும்' என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


