/உள்ளூர் செய்திகள்/கரூர்/வேலூர்- பள்ளப்பட்டி இடையே புதிய வழித்தடத்தில் அரசு பஸ்வேலூர்- பள்ளப்பட்டி இடையே புதிய வழித்தடத்தில் அரசு பஸ்
வேலூர்- பள்ளப்பட்டி இடையே புதிய வழித்தடத்தில் அரசு பஸ்
வேலூர்- பள்ளப்பட்டி இடையே புதிய வழித்தடத்தில் அரசு பஸ்
வேலூர்- பள்ளப்பட்டி இடையே புதிய வழித்தடத்தில் அரசு பஸ்
ADDED : செப் 20, 2011 01:19 AM
வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையம் வழியாக பள்ளப்பட்டிக்கு புதிய பஸ் வழித்தட துவக்க விழாவில் தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்றார்.
கரூர் மாவட்டம் வேலூரிலிருந்து, வேலாயுதம்பாளையம், நொய்யல், அத்திப்பாளைளயம், குப்பம், பரமத்தி, தென்னிலை, சின்னதாராபுரம், அரவக்குறிச்சி வழியாக பள்ளப்பட்டிக்கு புதி பஸ் வழித்தடத்தை போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார்.
புதிய வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ் குறித்து, திருச்சி மண்டலம் கும்பகோணம் கோட்ட பொதுமேலாளர் மாரிமுத்து கூறுகையில்,''புதிய வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ் காலை 6.35 மணிக்கு பள்ளப்பட்டியில் புறப்பட்டு, ஒன்பது மணிக்கு வேலூர் சென்றடையும். இதேபோல் 9.05க்கு வேலூரில் புறப்பட்டு பள்ளப்பட்டிக்கு 11.20க்கு வந்தடையும். இதேபோன்று பள்ளப்பட்டியில் 11.25க்கும், மாலை 3.40 மணிக்கும், பஸ் புறப்பட்டு மதியம் 1.40, மாலை ஆறு மணிக்கும் சென்றடையும், அங்கிருந்து 1.48க்கும், 6.05க்கு புறப்பட்டு பள்ளப்பட்டிக்கு பஸ் செல்லும்,'' என்றார். நிகழ்ச்சியில் திருச்சி மண்டலம் கும்பகோணம் கோட்ட பொதுமேலாளர் மாரிமுத்து, துணை மேலாளர் கிருஷ்ணன், கிளை மேலாளர் சேகர், ஒன்றிய செயலாளர் கமலகண்ண ன், புன்செய் புகளூர் பேரூர் செயலாளர் விவேகானந்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.


