Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வடவள்ளியில் "சன்ஸ்ரே' அடுக்குமாடி குடியிருப்பு

வடவள்ளியில் "சன்ஸ்ரே' அடுக்குமாடி குடியிருப்பு

வடவள்ளியில் "சன்ஸ்ரே' அடுக்குமாடி குடியிருப்பு

வடவள்ளியில் "சன்ஸ்ரே' அடுக்குமாடி குடியிருப்பு

ADDED : செப் 20, 2011 01:10 AM


Google News
பேரூர் : வடவள்ளியில், ஸ்ரீ தக்ஷா பிராபர்டி சார்பில்,'சன்ஸ்ரே' எனும் புதிய அடுக்குமாடி குடியிருப்புத்திட்டத்துக்கான பூமிபூஜை நடந்தது.

கோவையில் முன்னணி ரியல்எஸ்டேட் துறை சார்ந்த நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீதக்ஷா பிராபர்டி டெவலப்பர்ஸ், வடவள்ளியில் மற்றுமொறு புதிய குடியிருப்புத்திட்டத்தை துவக்கியுள்ளது. ' சன்ஸ்ரே' என்ற பெயரில் கட்டப்படவுள்ள, இப்புதிய சொகுசுமாளிகை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புத் திட்டம், வடவள்ளி, தொண்டாமுத்தூர் ரோட்டில் இயற்கையான சூழலில் அமைந்துள்ளது. இப்புதிய குடியிருப்புத் திட்டத்துக்கான பூமிபூஜை, நடந்தது. இதில், தக்ஷாபிராபர்டி நிர்வாக இயக்குநர் மோகன், இயக்குநர்கள் அருள்ஆண்டனி, ராம்நாராயணன், கணேசன், வடவள்ளி பேரூராட்சி தலைவர் அமிர்தவள்ளி, முன்னாள் பேரூராட்சி தலைவர் சண்முகசுந்தரம், தி.மு.க., ஒன்றியசெயலாளர் துரைசாமி, வீரகேரளம் பேரூராட்சி தலைவர் பக்தவச்சலம் உள்பட பலர் பங்கேற்றனர். ஸ்ரீதக்ஷாபிராபர்டி டெவலப்பர்ஸ் நிர்வாக இயக்குநர் மோகன் கூறியதாவது: நான்கு ஏக்கர் பரப் பளவில் அமையவுள்ள, 'சன்ஸ்ரே' குடியிருப்புத் திட்டத்தில், ஒன்பது தனித்தனி சொகுசு பங்களாக்கள் கட்டப்படும். இவை, 4,000 சதுரஅடி சொகுசு பங்களாக்களாகவும், நான்கு மாடிகளில் 128 அபார்ட்மெண்டுகளும், ஒவ்வொன்றும் 1,774 சதுரஅடி முதல் 2,087 சதுரஅடி பரப்பளவில் அமையவுள்ளது. சன்ஸ்ரே குடியிருப்புத்திட்டத்தின் வாடிக்கையாளர்களுக்கு துவக்கவிழா சலுகையாக, சதுரஅடிக்கு ரூ. 2,300 என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, இச்சலுகை அளிக் கப்படும். முன்பதிவு செய்ய விரும்புவர்கள், 8754041427, 87540 41428, 9500572177, 99449 58586, 9597907777 என்ற செல்போன் நம்பர்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, நிர்வாக இயக்குநர் மோகன் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us