/உள்ளூர் செய்திகள்/சேலம்/சேலத்தில் 3 நாள் தியான பயிற்சி ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு தீட்சைசேலத்தில் 3 நாள் தியான பயிற்சி ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு தீட்சை
சேலத்தில் 3 நாள் தியான பயிற்சி ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு தீட்சை
சேலத்தில் 3 நாள் தியான பயிற்சி ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு தீட்சை
சேலத்தில் 3 நாள் தியான பயிற்சி ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு தீட்சை
சேலம்: ''சேலத்தில் வரும் 30ம் தேதி முதல் 2ம் தேதி வரை ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ், தியான, யோக பயிற்சி அளித்து, ஒரே நாளில், 10 ஆயிரம் பேருக்கு தீட்சை கொடுக்கிறார்,'' என்று தமிழக ஈஷா யோகா வகுப்பு ஒருங்கிணைப்பாளர் பிரபோதா தெரிவித்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு யோகா வகுப்பு ஒருங்கிணைப்பாளர் பிரபோதா கூறியதாவது: சேலத்தில், மூன்று நாட்களுக்கு நடக்கும் தியான, யோகா பயிற்சி முகாமில், 10 ஆயிரம் பேர் கலந்து கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான குடிநீர், தற்காலிக கழிப்பறை, வாகன நிறுத்தும் இடம் போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. ஈஷா யோகா மைய நிறுவன தலைவர் ஜக்கி வாசுதேவ் நேரடியாக தியான, யோக பயிற்சியளித்து, ஒரே நாளில், 10 ஆயிரம் பேருக்கு தீட்சை அளிக்கவுள்ளார். 'சாம்பவி மஹா முத்ரா' என்ற தியான, யோகா முறையை கற்றுத் தர உள்ளார். 114 வகை தியானத்தில், 113 தியானம் மனம் சம்பந்தப்பட்டது. ஒரே ஒரு தியான முறை சூட்சமத்தை அடிப்படையாக கொண்டது. 'சாம்பவி மஹா முத்ரா' பயிற்சியில் தியான கலை, யோக கலை இரண்டையும் கலந்து, பக்தர்களுக்கு கற்பிக்க உள்ளார். 15 வயதுக்கு மேற்பட்டோர் தியான, யோகா பயிற்சியில் கலந்து கொள்ளலாம். சம நிலையில் மனதை பக்குவப்படுத்தும் கலையை, கலந்துரையாடல் மூலம் விளக்கவுள்ளார்.
தொடர்ந்து தினமும் அரை மணி நேரம் 'சாம்பவி மஹா முத்ரா' தியான பயிற்சி செய்வதன் மூலம் நாள் பட்ட வியாதி, ஆஸ்துமா, மூட்டுவலி, ரத்த கொதிப்பு, 'சைனஸ்,' தோல்வியாதி உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் குணமாகி, உடல் ஆரோக்கியம் மேலோங்கும். பள்ளி குழந்தைகள் ஞாபக சக்தி பெறுவதுடன், அலைபாயும் மனதை அடக்கி ஆளும் திறன் பெறுவர். ஜக்கி வாசுதேவ் அளிக்கும் தியான, யோக பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள், 890 350 2000, 890 350 3000 ஆகிய ஃபோன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு, இலவசமாக மர கன்றுகள் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


